திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி பி.டி.ஓ அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் லஞ்ச லாவண்யம் எம்.எஸ் அந்தோணி அம்மாள், ஜி.எஸ் உஷா ...?
திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு கீழ்தட்ட பயனாளிகளிடம் லஞ்ச லாவண்யம் கேட்டு பெறும் அவல நிலை தொடர்ந்து நிலவி வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வசூல் வேட்டையில் ஈடுபடுவோர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள முன் வர வேண்டும் என்று கீழ்த்தட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழக அரசால் ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு உதாரணத்துக்கு பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு ரூபாய் 25000 ஒரு சவரன் தங்கம், அதேபோல் விதவை மகள் திருமணத்திற்கு ரூபாய் 25000 ஒரு சவரன் தங்கம், மறுமணத்திற்கும் ரூபாய் 25000 ஒரு சவரன் தங்கம், கலப்பு திருமணத்திற்கும் ரூபாய் 25000 ஒரு சவரன் தங்கம், பட்டதாரி பெண்களுக்கு ரூபாய் 50000 ஒரு சவரன் தங்கம், என டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இதில் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. இந்த திட்டத்தில் பயன்பெற ஒவ்வொருவரும் பி.டி.ஓ அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் திட்ட பிரிவில் விண்ணப்பதாரர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக நல விரிவாக்க அலுவலர், மற்றும் ஊர் நல அலுவலர்களின் மூலமாக ஒப்புதலின் பேரில் அனைத்து ஆவணத்துடன் விண்ணப்பித்தார்கள் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே அரசு இ-சேவை மூலம் பதிவு செய்து ஒப்புதல் சான்றுகளுடன் மணப்பெண்ணின் பள்ளிச் சான்று, கல்லூரி புரோபஷனல், திருமண அழைப்பிதழ், வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், இவை அனைத்தும் மூன்று செட் நகல்கள். எடுத்துச்சென்று எம்.எஸ். மற்றும் ஜி.எஸ்களிடம் வழங்க வேண்டும் இவர்கள் திருமணத்திற்கு முன்னதாக திடீரென மணப்பெண் வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொள்வார்கள். எம்.எஸ் மற்றும் ஜி.எஸ்கள் அந்த சமயத்தில் மணப்பெண்ணின் வசதி வாய்ப்புகளை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் லஞ்சப் பணமாக மணப் பெண் வீட்டாரிடம் வசூலித்து விடுவார்களாம், திருச்சி மாவட்டம் லால்குடி பி.டி.ஓ அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் விரிவாக்க அலுவலர்களாக பணியாற்றி வருபவர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த (எம்.எஸ்.) அந்தோணி அம்மாள், ஊர் நல அலுவலராக (ஜி.எஸ்) உஷா பணியாற்றி வருகிறார்கள் இவர்கள் இருவர் கூட்டணியில் ரூபாய் 25 ஆயிரம் ஒரு சவரன் தங்கம் திட்டத்திற்கு, ரூபாய் 5000. ஆயிரம் அதேபோல் பட்டதாரி பெண்களுக்கு வழங்கப்படும் ரூபாய் 50000 ஒரு சவரன் தங்கம் திட்டத்திற்கு, ரூபாய் 7000. என லஞ்ச லாவண்யம் வாங்குவதாக விண்ணப்பதாரர்கள் சொல்லுகின்றனர். இவர்கள் கேட்கும் லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் ஏதாவது ஒரு காரணம் சொல்லி விண்ணப்பத்தை ஓரம்கட்டி விடுவார்களாம். இதற்கு பயந்து வந்து விண்ணப்பதாரர்கள் அந்த லஞ்ச லாவண்யார்கள் கராராக கேட்கும் பணத்தை கொடுத்து காரியத்தை நகர்த்தி கொள்கிறார்களாம். வாங்கும் லஞ்சத்தில் மாவட்ட சமூக பாதுகாப்பு அதிகாரிகளும் பங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. லஞ்சம் வாங்குவதுதான் இவர்களது டெக்னிக். இதற்கென தனி பாடம் கற்றுக் கொண்டு இருப்பார் போல் தெரிகிறது (எம்.எஸ்) அந்தோணியம்மாள் இவர் யாரிடம் எப்படிப் பேசுவது என தனி பாடம் படித்திருப்பார் போல் தெரிகிறது , கொடி நாள் வசூல், ராணுவ வீரர் தின வசூல் என விண்ணப்பதாரர்களை தொந்தரவு செய்து அவர்களிடம் போலி பில்களை காட்டி லஞ்ச லாவண்யத்தை பெற்றுக்கொண்டு வலம் வருகிறார்களாம், எம்.எஸ், ஜி.எஸ் என்றால் கூட இது தவிர தமிழகத்தில் ஆண்டுதோறும் சமூக பாதுகாப்பு துறைக்கு நிதி ஒதுக்குவது ஆண்டுதோறும் அதிகரித்துக் கண்டே இருக்கிறது
ஆனால் அந்த நீதிகள் எல்லாம் கீழ்தட்டு மக்களுக்கு உரிய நேரத்தில் போய் சேருகிறதா என்பது பெரிய கேள்விக் குறியாக உள்ளது இது தவிர பெண்களுக்கு பாதுகாப்பு வரதட்சனை கொடுமை போன்ற வழக்குகள் எல்லாம் சமூகநலத் துறை சார்பாகவும் தீர்வு காணும், சிறார்களை பாதுகாப்பதும் இத்துறையின் முக்கிய அம்சமாக திகழ்கிறது, சமூக நல பாதுகாப்பு துறையில் நிதி உதவி அளிப்பது ஒன்றே இத்துறையின் முக்கிய பணி என்பதால் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது ராணுவத்தில் ஊழல் செய்தால் அது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து, சுகாதாரத் துறையில் ஊழல் செய்தால் அது மனிதன் உயிருக்கு ஆபத்து, அதுவே சமூக நலத்துறையில் ஊழல் செய்தால் அது ஒவ்வொரு குடும்பத்தில் ஏற்படுத்தும் விவாகரத்து தற்கொலை கடனாளி என உருவெடுக்கிறது, தாலிக்குத் தங்கம் திட்டத்திற்கு சரியாக நிதி ஒதுக்காமல் போகவே கடன் உடன் வாங்கி திருமணத்தை நடத்திய தாய்மார்கள் கடன்காரர்களுக்கு கடனை திருப்பிச் செலுத்த அரசின் திருமண நல உதவி திட்டம் எப்போது வரும் என்று தவியாய் தவித்த நிலையில்தான் தமிழகம் முழுவதும் பி.டி.ஓ வட்டத்திற்கு உட்பட் திருமணம் முடிந்த பெண்களுக்கு நிதியை ஒதுக்கி தாலிக்கு தங்கம் உதவித் திட்டம் மூன்று ஆண்டுக்கும் சேர்த்து நடப்பாண்டில் மணப்பெண்களுக்கு வழங்கப்பட்டது, இந்தத் தாலிக்கு தங்கம் திட்டம் பெறுவதற்கு தில்லாலங்கடி எம்.எஸ் அந்தோணியம்மாள் இவர்
லால்குடி பி.டி.ஓ அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்த இரண்டு ஆண்டுகளில் லஞ்ச லாவண்ணத்தில் ஈடுபட்டு கொண்டுள்ளனர் என்பது அப்பகுதி மக்களிடம் விசாரணை செய்தபோது வெளிச்சத்திற்கு வராத தகவல்களும் உள்ளது, ஜி.எஸ் உஷா என்பவர் தனது சொந்த ஊரில் பணியாற்றிக் கொண்டு உள்ள நிலையில் தாலிக்கு தங்கம் வழங்கும் அலுவலகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர் இது தவிர இந்த பிளாக்கில் புரோக்கர்கள் வைத்துக்கொண்டு அவர்கள் மூலமாக கொண்டுவரும் அப்ளிகேஷன்களை வாங்கிக்கொண்டு மேலும் வாங்க வேண்டிய லட்ச லாவண்ணங்களை வாங்கிக் கொண்டு பரிந்துரை செய்து வருவாராம், யாராவது கேள்வி கேட்டால் அவரை நைசாக பேசி வேலையை முடித்து தருவதாக பாவனை காட்டுவாராம் அரசியல்வாதிகள், மேல் அதிகாரிகள் பரிந்துரை செய்தால் அந்த அப்ளிகேஷனை மட்டும் பரிந்துரைக்கு ஏற்றுக்கொள்வாராம், மேலும் கீழ்தட்டு மக்கள் யாராவது கேள்வி கேட்டால் அவர்களை மாதக்கணக்கில் அலைய விட்டு அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவாராம் கில்லாடி எம்.எஸ் அந்தோணியம்மாள், ஜி.எஸ் உஷா என்கின்றனர் மேலும்
பயனாளிகளின் ஆவணம் சரியாக இருந்தும் அவர் கேட்ட லஞ்ச லாவண்யத்தை கொடுத்தும் இதுவரை எங்களுக்கு தாலிக்கு தங்கம் உதவி வந்து சேரவில்லை மாதக்கணக்கில் வருடக்கணக்கில் அலைந்தும் எங்களுக்கு பயன் இல்லை என்கிறார்கள் கீழ்தட்ட பயனாளிகள் இவர்களுக்கு நியாயம் கிடைக்குமா என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர், இவர்கள் கட்டாய லஞ்ச வசூல் லாவண்ணத்தை நடத்தி வருகின்றனர். இதற்கெல்லாம் எப்போது தீர்வு கிட்டும் என்று விண்ணப்பதாரர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர், தி.மு.க அரசு அமைந்து விட்டது இனியாவது சம்பந்தப்பட்ட சமூக பாதுகாப்பு நலத்துறை அமைச்சர் மற்றும் சமூக பாதுகாப்பு நல இயக்குநர் நடவடிக்கை எடுப்பார்களா? என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் கீழ்த்தட்ட மக்கள், சமூக பாதுகாப்பு நல அலுவலராக இருப்பவர் தமிமுன்னிஷா இவர் வந்த பிறகு தாலிக்கு தங்கம் உதவி திட்டத்தில் லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளது என்று சொல்லப்படுகிறது. இதனால் எம்.எஸ் மற்றும் ஜி.எஸ்கள் வாங்கும் லஞ்ச லாவண்ணத்தில் மாவட்ட (D.S.W.O) சமூக பாதுகாப்பு நல அலுவலர். தமிமுன்னிஷாவுக்கு மாதம் மாதம் ஒவ்வொரு பி.டி.ஓ அலுவலகத்தில் இருந்து தாலிக்குத் தங்கம் உதவி திட்ட பிரிவில் இருந்தும் பங்கு சென்றுவிடுவதால் அவர் எம்.எஸ் அந்தோணி அம்மாள், ஜி.எஸ் உஷா வாங்கும் லஞ்ச குற்றச்சாட்டு மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லையாம், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் லஞ்சம் கேட்கும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டுள்ளார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்ப்போம் அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை திடீரென தாலிக்கு தங்கம் வழங்கும் அலுவலகத்தில் புகுந்து லஞ்ச லாவண்யாத்தில் திளைக்கும் எம்.எஸ், ஜி.எஸ்களை கையும் களவுமாக பிடித்து சிறைக்கு அனுப்புவார்களா..?