ஒரங்கூர் ஊராட்சிக்குட்பட்ட நியாய விலை கடையில் கொரோனா தொற்று வைரஸ் இரண்டாவது அலை நிவாரணமாக ரூ. 2000, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் இரண்டாவது அலையாக கொரோனா தொற்று  வைரஸ் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 வழங்குவதாக அறிவித்து இருந்தார் முதலமைச்சர் ஆனவுடன் முதல் கையெழுத்தாக குடும்ப அட்டைதாரர்களுக்கு இரு தவணையாக 2 ஆயிரம் இரண்டாயிரம் என சென்னை மாவட்டத்தில் துவக்கப்பட்டு தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகள் மூலம் அமல்படுத்தப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது இதில் கடலூர் மாவட்டம் ஒரங்கூர் ஊராட்சிக்குட்பட்ட நியாய விலை கடையில் கொரோனா தொற்று வைரஸ் இரண்டாவது அலை நிவாரணமாக ரூபாய் 2000, வாழ்வாதாரம் இழந்து தவித்துக் கொண்டிருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கடலூர் மேற்கு மாவட்ட திமுக கழக செயலாளர் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான சி.வெ கணேசன், ஆலோசனைப்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு மங்களூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பா.செங்குட்டுவன், முன்னிலையில் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் அ.சேகர், மாவட்ட பிரதிநிதி குமணன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி செல்வராசு, கிளைக் கழகச் செயலாளர்கள் சி.பாண்டியன், க.கேசவன், அ.சேகர், அ.மகாலிங்கம், மு.செல்வராசு, மற்றும் கழக நிர்வாகிகள் ரா.கோவிந்தசாமி, ம.மோகன் அ.அண்ணாமலை பி.விஸ்வநாதன், ரா.வெங்கடாஜலம், ரா.தேவேந்திரன், ஆர்.சத்யாமூர்ததி ஆகியோர் கலந்துக் கொண்டனர்