காட்பாடி போக்குவரத்து காவல் துறை, காட்பாடி ரெட்கிராஸ் சங்கம் இணைந்து ஹெல்மெட் விழிப்புணர்வு வாகன பேரணி
தேசிய சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு காட்பாடி போக்குவரத்து காவல் துறை, காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் கிளை சங்கமும் இணைந்து இருசக்ர வாகன ஓட்டுநர்களுக்கு ஹெல்மெட் அணிந்து ஓட்டுவது குறித்த விழிப்புணர்வு பேரணி காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜி.என்.பாலாஜி தலைமையில் காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன்
தொடக்கி வைத்தார். போக்குவரத்து உதவி ஆய்வாளர் பி.ரமேஷ்பாபு, மேலாண்மைக்குழு உறுப்பினர் வி.காந்திலால்படேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்து 60பேர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பொருளாளர் வி.பழனி தன்னார்வ தொண்டர் எஸ்.மோதகப்பிரியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இரு சக்கர வாகன பேரணியானது காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் துவங்கி ஓடைபிள்ளையார் கோவில், ஆக்ஸீலியம் காலேஜ் ரவுண்டானா, தனபாக்கியம் மண்டபம், சில்க்மில் வழியாக விருதம்பட்டு பாலறு பாலம் வரை சென்று நிறைவு பெற்றது.
தேசிய சாலை பாதுகாப்பு முன்னிட்டு போக்குவரத்து காவல், ரெட்கிராஸ் சங்கம் இணைந்து நடத்திய இருசக்ர வாகன ஓட்டுநர்களுக்கு ஹெல்மெட் அணிந்து ஓட்டுவது குறித்த விழிப்புணர்வு பேரணியை போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜி.என்.பாலாஜி தலைமையில் ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், துவக்கி வைத்த போது எடுத்தப்படம். உடன் அவை வி.காந்திலால்படேல் ஆகியோர் பங்கேற்றனர்