தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் பொங்கல் விழா வேலூர் சிறைத்துறை துணைத்தலைவர் பங்கேற்பு
தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் வேலூர் மாவட்ட கிளையும் தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் அரசினர் பாதுகாப்பு இல்லமும் இணைந்து வேலூர் காகிதப்பட்டரையில் உள்ள இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. வேலூர் சரக சிறைத்துறை துணைத்தலைவர் கே.ஜெயபாரதி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
பாதுகாப்பு இல்லத்தில் பொங்கல் விழா, விவேகானந்தரின் 158வது பிறந்த நாள் விழா, 86 முறை ரத்ததானம் செலுத்தியவருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க துணைத் தலைவர் மூத்த வழக்கறிஞர் டி.எம்.விஜயராகவலு தலைமை தாங்கி பொங்கல் விழாவின் முக்கியத்துவம் குறித்து பேசினார். அரசு பாதுகாப்பு இடத்தின் கண்காணிப்பாளர் ந.உமாமகேஸ்வரி வரவேற்றுப் பேசினார்.
முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், ஆப்கா மைய பேராசிரியர் முனைவர் பியூலா இம்மானுவேல், மாவட்ட குழந்தைகள் நல குழுவின் தலைவர் ஏ.ஜி.சிவகலைவாணன், பொருளாளர் ஆர்.சீனிவாசன் கண்மருத்துவ நிபுனர் டாக்டர் வீ.தீனபந்து ராணிப்பேட்டை வரவேற்பு இல்ல கண்காணிப்பாளர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக வேலூர் சரக சிறைத்துறை துணைத்தலைவர் கே ஜெயபாரதி அவர்கள் கலந்துகொண்டு 86 முறை ரத்த தானம் செய்த குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் ஏ.ஜி. சிவ கலைவாணன் அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
விவேகானந்தர் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாள் விழா குறித்து செ.நா.ஜனார்த்தனன் பேசினார். முடிவில் உதவி கண்காணிப்பாளர் கோ.தாஸ் நன்றி கூறினார். அனைவருக்கும் சர்கரைப்பொங்கல் வழங்கப்பட்டது. அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் நடைபெற்ற விழாவில் 86முறை இரத்த தானம் செய்த ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட குழந்தைகள் நல குழுவின் தலைவர் எ.ஜி.சிவகலைவாணன் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழை வேலூர் சரக சிறை துறை துணைத்தலைவர் கே.ஜெயபாரதி வழங்கிய போது எடுத்தப்படம் உடன் (வலமிருந்து) இல்ல கண்காணிப்பாளர் ந.உமாமகேஸ்வரி, துணைத்தலைவர் டி.எம்.விஜயராகவலு, செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், ஆப்கா விரிவுரையாளர் பியூலா இம்மானுவேல், பொருளார் ஆர்.சீனிவாசன் ஆகியோர். பங்கேற்றனர்