சட்டமன்ற தேர்தலில் இந்திய குடியரசு கட்சி நிச்சயம் போட்டியிடும்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அனந்தலை கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் குடியரசு கட்சியின் வஞ்சிக்கப்பட்ட மக்கள் முன்னணியின் தமிழக மாநில ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவினை இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் அவர்கள் பிறபித்துள்ளார் .இந்த நிலையில் தமிழக மாநில புதிய ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்  கொரோனா தடுப்பு ஊசி போடப்படும் போது அது பாரபட்சமின்றி அடித்தட்டு மக்களையும் சென்றடையும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் இந்திய குடியரசு கட்சி நிச்சயம் போட்டியிடும் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தை ஆளும் அதிமுக மற்றும் மத்திய பாஜக அரசால் வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார். மேலும் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த அவர் விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார் .இந்த  செய்தியாளர் சந்திப்பின்போது இந்திய குடியரசு கட்சியின் பொறுப்பாளர் சம்பத்குமார்
அஞ்சு, முத்து, தலித் முருகன், டாக்டர் தணிகைவேல், மாது சாமி ரவி பிச்சைமுத்து, ஹரிகிருஷ்ணன், ரவிச்சந்திரன், லோகநாதன்,  நாகராஜ், முன்னணி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்