சென்னை புத்தகரம் பகுதியில் யோக குடில் அமைத்து புதுமையான முறையில் யோகமார்கம் செய்து வரும் சிவகுமார் என்ற நபர் தனது யூடியூப் சேனலில் மனம் போனபோக்கில் சைவசமயத்தார் மட்டுமல்லாது உலகெங்கிலும் வாழும் இந்து மக்கள்போற்றி பாதுகாத்து வணங்கும் திருமுறைகளில் ஒன்றான திருவாசகம் நூலையும் சிவனடியார்களின் உயர்ந்த மந்திரங்களிள் ஒன்றான திருச்சிற்றம்பலம் என்ற மந்திரத்தையும் சிவனடியார்கள் செய்துவரும் கோயில் தூய்மைப்படுத்தும் திருபணியான உழவாரம் பற்றியும் கொச்சையாக கருத்துக்களை பேசி சபையேறமுடியாதவார்த்தைகளை இணைத்து பேசி உலகெங்கிலும் வாழும் சிவபக்தர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் அனைவரையும் மனவேதனை ஆகும்படியும் மனம் அமைதி இல்லாமல் ஆகும்படியூம் செய்துள்ளனர் இதனால் சிவனடியார்களை தீராத மன உளைச்சலை ஏற்படுத்திய சிவகுமார் என்ற நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு இராணிப்பேட்டை மாவட்ட சிவனடியார் திருக்கூட்டம் சேர்ந்தவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.இதில் 150க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.