கன மழையில் வீட்டை இழந்தவர்களுக்கு புதிய வீடு வழங்க வேண்டும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் திமுக கோரிக்கை விடுத்தார்
தென்காசி மாவட்டம் சுரண்டை வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையில் வீடுகளை இழந்தவர்களுக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தென் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக இடைவிடாது மழை பெய்து வருகிறது.இந்நிலையில் சுரண்டை வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 3 வீடுகள் இடிந்தது. இந்தநிலையில் சுரண்ட நகர திமுக செயலாளர் ஜெயபாலன் ஏற்பாட்டில் வீடுகளை இழந்தவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது‌.தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வழக்கறிஞருமான சிவபத்மநாதன் கலந்துகொண்டு வீடுகளை இழந்தவர்களுக்கு நிதி உதவி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் பெட்ஷீட், பாய், தலையணை போன்றவற்றை வழங்கினார். அப்போது அவர் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு ரூ 4500 வழங்குகிறது.இந்த தொகை அவர்களுக்கு எந்த வகையிலும் பயன் அளிக்காது.எனவே கடந்த ஒரு வாரமாக பெய்த மழையில் வீடுகளை இழந்தவர்களுக்கு தமிழக அரசு பேரிடர் நிதியிலிருந்து வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும்.மேலும் சிறிய பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு நிவாரண தொகையை அதிகரித்து வழங்க வேண்டும்‌.மழை அறிவிப்பின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என கூறினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் ஆறுமுகச்சாமி,முத்து சுப்பிரமணியன், பெடரல் கார்த்திக், கோமதிநாயகம், மாரியப்பன், மாடசாமி, மாணவரணி மாரியப்பன், மாடசாமி, ரமேஷ், சேக் மைதீன், தங்கவேலு, வடிவேலு, சீனிவாசன் ஆகியோர் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.