சட்டப்பணிகள் குழுவினர் சார்பிலும் இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளையும் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்பேரிலும் தலைவர் வட்டசட்டப்பணிகள் குழு காட்பாடி அவர்களின் உத்தரவின் பேரில்  இந்தியாவின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் காட்பாடி வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பாகவும் இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளையும் இணைந்து காட்பாடி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு காட்பாடி வட்ட சட்ட பணிகள் குழு தன்னார்வலர் எஸ் மகாலிங்கம் தலைமை தாங்கினார் காட்பாடி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஜி.என்.பாலாஜி. உதவி ஆய்வாளர் பி.ரமேஷ்பாபு மற்றும் காட்பாடி வட்ட சட்டப்பணிகள் குழுவின் இளநிலை உதவியாளர் திருமதி.அல்மாஸ் கலந்துக் கொண்டு பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு சாலை போக்குவரத்து விதிமுறைகள் பற்றி பொது மக்களுக்கு எடுத்துக் கூறினார் காட்பாடி வட்ட ரெட் கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் அவை துணைத்தலைவர் ஆர்.ஸ்ரீநிவாசன் செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு மேலாண்மை குழு உறுப்பினர் வி காந்திலால் பட்டேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்