வருவாய் கோட்டாட்சியர் எஸ்.கணேஷ் பங்கேற்றார்
மூத்த வழக்கறிஞர் விஜயராகவலு கம்பளி ஆடைகளை வழங்கினார்
இந்தியன் ரெட்கிராஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக தமிழக அரசின் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் வேலூர் மாநகரம், காட்பாடி செங்குட்டையில் இயங்கி வரும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் காட்பாடி ரெட்கிராஸ், காட்பாடி ஒன்றிய அறிவியல் இயக்கம் இணைந்து காப்பக மாணவிகளுகளுடன் பொங்கல் விழா, 13.01.2021 புதன்கிழமை காலை 12 மணியளவில் வேலூர் வருவாய் கோட்ட ஆட்சியர் மற்றும் காட்பாடி ரெட்கிராஸ் கிளையின் தலைவர் எஸ்.கணேஷ் தலைமை தாங்கினார். குழந்தைகள் காப்பக இல்ல குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது.. இந்த காப்பகத்தில் உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு கல்வி பயிலும் மாணவிகள் கல்வி பெற உரிய உதவிகள் செய்யப்படும் என்றார். மேலும் மாணவிகள் தினமும் தமிழ் ஆங்கில நாளேடுகளை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் காட்பாடி ரெட்கிராஸ் அமைப்பின் சார்பில் நடைபெறும் இந்த பொங்கல் விழா சிறப்பாக உள்ளது. முன்னதாக குழந்தைகள் காப்பகத்தின் கண்காணிப்பாளர் கே.எ.சாந்தி, வரவேற்று பேசினார். அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், அவை துணைத் தலைவர் குமரன்.ஆர்.சீனிவாசன், ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க துணைத்தலைவர் மற்றும் மூத்த வழக்கறிஞர் டி.எம்.விஜயராகவலு காப்பகத்தில் உள்ள மாணவிகள் 22 பேருக்கு கம்பளி ஆடைகளை வழங்கினார்.
காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒன்றிய செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் பொருளாளர் ஆர்.லோகநாதன், முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க துணைத்தலைவர் டி.எம்.விஜயராகவலு, ரெட்கிராஸ் பொருளாளர் வி.பழனி, செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் எல்.ரவிச்சந்திரன், எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், ஆர்.லட்சுமிநாராயணன், எம்.பிரபு, ஆகியோர் வாழ்த்தி பேசினர். காப்பக மாணவிகளுக்கு பொங்கல் கரும்பு இனிப்புகள் வழங்கப்பட்டன. மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.