தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தான் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டு காளைக்கு தானே மண் குத்தும் பயிற்சி மற்றும் நீச்சல் பயிற்சி அளித்து ஜல்லிக்கட்டுக்கு காளைகளை தயார் படுத்தி வருகிறார்
தமிழக அமைச்சர்களில் சுறுசுறுப்புக்கு பெயர் போனவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் . இரவு பகல் பாராமல் புயல் காலங்களிலும் கொரோனா காலங்களிலும் மட்டுமின்றி எப்போதும் அனைத்து பகுதிகளிலும் தானே முன்னின்று சிறப்பு பணிகளைச் செய்பவர் . அதேபோல் கட்சிப் பணிகளிலும் சோர்வடையாமல் சுறுசுறுப்புடன் பணியாற்றக் கூடியவர். இதன் பலனாக எளிதில் இவருக்கு புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பதவியும் அதனைத் தொடர்ந்து அமைச்சர் பதவியும் கிடைத்தது . பதவிகள் கிடைத்த பின்னரும் அதே சுறுசுறுப்புடன் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்றும் செயல்பட்டு வருகிறார் என்று கட்சியினரும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். இந்த சுறுசுறுப்பான பணிகளால் தமிழகத்தின் எந்த பகுதிகளிலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதேபோல் தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இதனால் இவர் குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி பந்தயங்கள் நடைபெறும் விழாக்களை துவக்கி வைப்பதோடு தானே குதிரை வண்டியில் ரேஸ் செல்வதும் உண்டு. அதேபோல் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வமுடைய இவர் தான் வளர்த்து வந்த கொம்பன் காளை ஜல்லிக்கட்டின் போது அங்கிருந்த கட்டையில் மோதி ஜல்லிக்கட்டு திடலிலேயே உயிரிழந்தது . அதனை தனது சொந்த ஊருக்கு கொண்டுவந்து உரிய மரியாதையுடன் அடக்கம் செய்தார். மேலும் புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வெண்கல சிலையை நிறுவி அதனை திறந்து வைத்தார். இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடந்து வரும் நிலையில் தான் வளர்த்து வரும் கொம்பன் காளைக்கு தனது சொந்த ஊரான விராச்சிலை பகுதியில் பயிற்சி அளிக்க நினைத்தார். இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளையை தானே பிடித்துச் சென்று மண் குத்தும் பயிற்சி மற்றும் நீச்சல் பயிற்சி அளித்தார் . இந்த சம்பவங்கள் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது