ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தன்னுக்கு பதக்கம் பாராட்டுச் சான்றிதழ்

72வது குடியரசு தின விழாவில் 
கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தன்னார்வ தொண்டாற்றிய ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தன்னுக்கு பதக்கம் அணிவித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் பாராட்டு
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையில் உள்ள ஜுனியர்  ரெட் கிராஸ் சங்கத்தின் நிர்வாகிகள் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் க.குணசேகரன், இணை அமைப்பாளர் எஸ்.ரகுபதி ஆகியோருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 2020 – 2021ஆம் ஆண்டின் சிறப்பான பணியை பாராட்டி  மிக சிறப்பாக தன்னார்வ தொண்டு செய்த ஜுனியர் ரெட்கிராஸ் ஆசிரியர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம் அவர்களார் பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கி பாராட்டினார்.*  வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் காமினி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்திபன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வகுமார், வருவாய் கோட்டாட்சியர் சே.கணேஷ், ஷேக்மன்சூர், மாவட்ட ஆட்சியரின் அலுவலக மேலாளர் முரளி, வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கு,குணசேகரன், வேலூர் கல்வி மாவட்ட அலுவலர் மு.அங்குலட்சுமி, நேர்முக உதவியாளர் கோபாலகிருஷ்ணன், பள்ளி துணை ஆய்வாளர் மணிவாசகம் ஆகியோர் உடனிருந்தனர். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறையில் இருந்த நாட்களில் காட்பாடி தற்காலிக உழவர் சந்தை வளாகத்தில் ஆகஸ்ட் 31 வரை 150 நாட்கள் சிறப்பாக பணியாற்றினார்கள். மக்களிடையே சமூக இடைவெளி கை சுத்திகரிப்பான் பயன்படுத்துதல் முக கவசம் அணிந்து சந்தைக்கு வருதல் உள்ளிட்ட விழிப்புணர்வு பணிகளை செய்தனர். மேலும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆலோசனையின் படியும் கோட்டாட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் காட்பாடி ரயில்வே ஜங்ஷனில் இருந்து புறப்பட்ட வடமாநில ரயில்களில் நோயாளிகள் மற்றும் வடமாநிலத்தை சார்ந்தவர்களை  ரயில் ஏறுவதற்கு உதவிகளை செய்தனர்.  மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மளிகை பொருட்களையும் வழங்கினர்.  கரோனா நோய் பரவல் காலத்தில் நடைபெற்ற விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் தன்னார்வ தொண்டு செய்தனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 2020 – 2021ஆம் ஆண்டின் சிறப்பான பணியை பாராட்டி  மிக சிறப்பாக தன்னார்வ தொண்டு செய்த ஜுனியர் ரெட்கிராஸ் வேலூர் கல்வி மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன்,  இணை அமைப்பாளர் எஸ்.ரகுபதி, பொருளாளர் க.குணசேகரன் ஆகியோருக்கு  பாராட்டு பதக்கம் அணிவித்து சான்றிதழை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தம் வழங்கிய போது எடுத்தப்படம், உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன், வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கு,குணசேகரன், வேலூர் கல்வி மாவட்ட அலுவலர் மு.அங்குலட்சுமி ஆகியோர் கலந்துக் கொண்டனர்