தப்பகுட்டை ஊராட்சி மன்றத் தலைவர் யார் என்ற பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நீடிப்பு
சேலம் மாவட்டம் தப்பகுட்டை ஊராட்சி மன்றத் தலைவர் யார் - பொதுமக்கள் குழப்பம்


சேலம் தப்பக்குட்டை ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் நிர்வாக அதிகாரத்தை கையில் எடுத்து செயல்படுவது குழப்பத்தை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியம் தப்பக்குட்டை ஊராட்சியைச் சேர்ந்தவர் பிரபு. இவர், அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் விஜயாவிடம், வீட்டுவரி ரசீதில் பெயர் மாற்றம் செய்யக் கோரி மனு அளித்துள்ளார். மனுவை வாங்க மறுத்த விஜயா, தனது கணவர் தங்கராஜிடம் கொடுத்துவிடுங்கள் என தெரிவித்துள்ளார். அதற்கு மனுதாரர் நீங்கள்தான் தலைவர் என கேள்வி எழுப்பிய நிலையில், இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது ஊராட்சி மன்ற பணிகள் அனைத்தும் எனது கணவர்தான் பார்த்துக் கொள்கிறார் என தெரி வித்துள்ளார்.

வேறு வழியில்லாமல் தங்கராஜிடம் மனு கொடுத்துள்ளார். அதற்கு, கணவர் தங்கராஜ் உனக்கு ரசீது வழங்க முடியாது நீ எங்கே வேணாலும் சென்று பார்த்துக் கொள் என மிரட்டியுள்ளார். இதுகுறித் தான வீடியோ, தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.  இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பிரபு கூறுகையில், தப்பக்குட்டை ஊராட்சியின் வரவு செலவு குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்துள்ளேன். இதுவரை எனக்கு பதில் மனு வரவில்லை. இதன் காரணமாக எனது வரி ரசீது பெயர் மாற்றத்தை வேண்டுமென்றே தலைவரின் கணவர் புறக்கணிக்கிறார் என குற்றம் சாட்டினார்.

மேலும் இதுகுறித்து மகுடஞ்சாவடி ஒன்றிய வட்டார வளர்ச்சி கிராமம்  ஊராட்சி அலுவலரிடம் புகார் தெரிவித்து உள்ளேன் எனவும் தெரிவித்தார். மேலும், தப்பகுட்டை ஊராட்சி பகுதியில் தலைவரின் கணவர் தங்கராஜ் ஒரு தலைப்பட்சமாக குடிநீர் வழங்குவது, தலைவரின் பணிகள் அனைத்தும் இவரே பார்த்துக்கள்வதாக அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்வது என எண்ணற்ற புகார்களை தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள், இவர் மீது உயர் அதிகாரிகள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்

சேலம் மாவட்ட செய்தியாளர் மா.மூர்த்தி காமராஜர்