தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகரில் ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் V.M ராஜ லட்சுமி தலைமையில் தி.மு.க இளைஞர் அணி மாநிலத் தலைவர் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து இன்று சங்கரன்கோவில் தேரடி திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைச்சர் V.M ராஜலட்சுமி தலைமை தாங்கினார். பெண்களை இழிவாகப் பேசிய உதயநிதியை கண்டித்து கோஷங்கள் எழுப்ப பட்டது.அமைச்சர் V.M ராஜலட்சுமி உதயநிதி அம்மாவும் ஒரு பெண்,மனைவியும் ஒரு பெண்,மகளும் ஒரு பெண் என்பதை உணர்ந்து பேச வேண்டும், தவறுதலாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், கட்சி பிரமுகர்கள், மாதர் சங்க பிரதிநிதிகள் வட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர் நல்லூர் ஒன்றிய செயலாளர் நன்றி கூறினார்கள். இதில் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்
உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து அமைச்சர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
• Bharathaidhazh