தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் தொழிற்கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆணைகள் வழங்கிடுமாறு தமிழக அரசின் பள்ளிக்கல்வி அமைச்சர் மாண்புமிகு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்களை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் என்.ரவி, ஒருங்கிணைப்பாளர் பி.திருநாவுக்கரசு, அமைப்புச் செயலாளர் எஸ்.துரைராஜ், மாநில துணைத் தலைவர்கள் க.ராஜா, கே.நட்பாளன், மாநில இணைசெயலாளர்கள் எம்.பாண்டுரெங்கன், சி.நாகராஜன், மாநில தணிக்கையாளர் ஆர்.ராஜசேகரன் தலைமை நிலைய செயலாளர் தி.தாகப்பிள்ளை, மாநில முன்னாள் தலைவர் த.இராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களையும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் அவர்களையும் சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து 2021ஆம் காலண்டரை வழங்கினர். பின்னர் கோரிக்கை மனுவினை அளித்தனர். மேலும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் முனைவர்.ச.கண்ணப்பன் அவர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது..
சென்னை உயர்நீதிமன்ற தீர்புரையின் பேரிலும் நீதிமன்ற மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்து வழங்கப்பட்ட தீர்ப்பினை ஏற்று 50% தொகுப்பூதிய பணிக்காலம் ஓய்வூதியம் பெற கணக்கிட வழங்கப்பட்ட அரசாணையில் விடுபட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் தமிழக அரசு ஆணை வழங்கிட கோருகின்றோம்.
தொழிற்கல்வி உயர்மட்ட குழுவின் தலைவர் டாக்டர் எச்.எஸ்.எஸ்.லாரன்ஸ் பரிந்துரையின் படியும், தற்போது மேல்நிலைப்பள்ளியில் உள்ள கணினி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட 12.2.2019ல் வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையிலும் மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் என்ற உச்சநீதிமன்ற தீர்புரையின்படி இணையான ஊதியம் உடனே வழங்கிட தமிழக அரசை கோருகின்றோம்.
வெவ்வேறு பாடங்களில் உயர்கல்வி பெற்றுள்ள அனைத்து வகை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வருவதை போல மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஊக்க ஊதியம் வழங்கிட கோருகின்றோம்.
தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றால் அப்பள்ளியில் தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடப்படும் நிலை தடுக்கப்பட வேண்டும்.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 600 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். கடந்த 10ஆண்டுகளாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தினால் நியமிக்கப்பட்டு பணியாற்றிவரும் தொழிற்கல்வி ஆசிரியர்களை பணிவரன்முறை செய்திட கோருகின்றோம்.
உச்ச நீதிமன்ற தீர்புரையின் பேரில் தூத்துக்குடி மாவட்ட தொழிற்கல்வி ஆசிரியர் சிலர் தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்பினை ஏற்று அவர்களுக்கு 1992 முதல் ரூ.2000/- அடிப்படை ஊதியம் வழங்கியதை போன்று அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் வழங்கிட கோருகின்றோம்.
அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ் 2018-19ஆம் கல்வியாண்டில் 67 மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்து அரசாணை வெளியிட்டது போல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்திட தமிழக அரசை கோருகின்றோம்.
மெல்ல கற்கும் மாணவர்கள் தொழிற்கல்வி பாடப்பிரிவில் சேர்க்கப்பட்டு கல்வி பெற்று தொழில் பயிற்சியும் பெற்று தன்னம்பிக்கையுடன் செயல்பட ஏதுவாக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களால் 1978ஆம் ஆண்டில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டு முதலமைச்சர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்களால் 1996ஆம் ஆண்டில் தொழிற்கல்வி உயர்மட்ட குழு அமைத்த செயல்படுத்தியதை போல் தொழிற்கல்வி மேலும் வளர்சி பெற அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் இரண்டு தொழிற்கல்வி பாடம் கட்டாய பாடமாக அறிவிக்க வேண்டும்.
உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உறுதி
கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.எ.செங்கோட்டையன். உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்கள். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் என்.ரவி, ஒருங்கிணைப்பாளர் பி.திருநாவுக்கரசு, அமைப்புச் செயலாளர் எஸ்.துரைராஜ், மாநில துணைத்தலைவர்கள் க.ராஜா, கே.நட்பாளன், மாநில இணை செயலாளர்கள் எம்.பாண்டுரெங்கன், சி.நாகராஜன், மாநில தணிக்கையாளர் ஆர்.ராஜசேகரன் மாநில முன்னாள் தலைவர் த.இராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களை சென்னை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த போது எடுத்த படம்