வேலூர் மாவட்டம் காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் 72வது குடியரசு தின விழா தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு. காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் 72வது குடியரசு தின விழா 26.01.2021 அன்று மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. சங்கத்தின் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார் பொருளாளர் வி.பழனி செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு ஆகியோர் முன்னிலை வகித்தார். மத்திய அரசின் வழக்கறிஞர் மற்றும் துணைத்தலைவர் வி.பாரிவள்ளல் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.
தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு. வேலூர் மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் கே.சௌந்திர்ராஜ், லோகேஷ், பிச்சைமுத்து, ரவிக்குமார், முருகன் ஆகியோரும் குடிநீர் வழங்குபவர் செல்வராஜ் ஆகியோரின் சிறப்பான சேவையினை பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
பொருளாளர் வி.பழனி, செயற்குழு உறுப்பினர்கள் எ.ஶ்ரீதரன் ஜெயின், எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், செ.ஜ.சோமசுந்தரம், செ.ஜ.உமாமகேஸ்வரி, துளிர் பள்ளி தலைமையாசிரியை த.கனகா ஆகியோர் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் நன்றி கூறினார். முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க அலுவலகத்தில் 72வது குடியரசு தின விழா வேலூர் மாவட்ட முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க அலுவலகத்தில் 72வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் துணைத்தலைவர் டி.எம்.விஜயராகவலு தலைமை தாங்கினார் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் தேசிய கொடியேற்றி வைத்தார். பொருளாளர் ஆர்.சீனிவாசன், இராமகிருஷ்ணன், மோதகப்பிரியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. காட்பாடி துளிர் பள்ளியில் 72வது குடியரசு தின விழா
காட்பாடி துளிர் பள்ளியில் 72வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை த.கனகா தலைமை தாங்கினார். தாளாளர் வி.பழனி தேசிய கொடியினை ஏற்றிவைத்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.
காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் நடைபெற்ற 72வது குடியரசு தினவிழாவில் தூய்மை பணியாளர்கள்களுக்கு துணைத்தலைவர் வழக்கறிஞர் வி.பாரிவள்ளல் பொன்னாடை அணிவித்து பாராட்டியபோது எடுத்தப்படம் உடன் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், அவை துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன், பொருளாளர் வி.பழனி எஸ்.ரமேஷ்குமார்ஜெயின், எ.ஶ்ரீதரன்ஜெயின், வி.காந்திலால்படேல் ஆகியோர் கலந்துக் கொண்டனர்