வாணியம்பாடி நகராட்சியில் 72வது குடியரசு தின விழா கொண்டாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் 72வது குடியரசு தின விழா சோ.புவனேஸ்வரன் (எ) அண்ணாமலை தனி அலுவலர் மற்றும் ஆணையர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதைத்தடர்ந்து எஸ்.பாபு பொறியாளர் வாணியம்பாடி நகராட்சி வரவேற்புரை ஆற்றினார் பின்னர் நகராட்சி ஆணையர் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர்கள் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் பொதுமக்கள் நகராட்சி ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர் ஜி. ரவி மேலாளர் இறுதியாக நன்றி உரையாற்றினார்