வேலூரில் குரூப்-1 தேர்வு நடைபெற்று வருகிறது மாநகராட்சி இரண்டாவது மண்டல சுகாதார அலுவலர் சிவகுமார் மேற்பார்வையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது
வேலூர் மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் உத்தரவு பேரில் இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் கே.சிவக்குமார் தலைமையில் இன்று காலை  குரூப்-1 தேர்வு நடைபெற உள்ள பள்ளிகளில் சுத்தம் செய்யப்பட்டு பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது, மேலும் தேர்வு எழுதப் படும் அறைகளில் லைசால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது, தேர்வு எழுத வரும் நபர்களை காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்த பிறகு உள்ளே அனுப்பப்பட்டது, முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு  முக கவசம் அணிந்து உள்ளே செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது,  தூய்மைப் பணியாளர்கள் மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்