தேனி பெரிய குளத்தில் வீசி கட்சியினர் டெல்லியில் வேளாண் சட்டத்தை எதிர்த்து மரணம் அடைந்த விவசாயிகளுக்கு வீரவணக்கம்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விதைலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண்மை திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி
புது டெல்லியில் போராடும் விவசாயிகள் போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.பெரியகுளம் அம்பேத்கர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த விவசாயிகள் உருவப் படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலை தாங்கினார். பெரியகுளம் நகர செயலாளர் ஜோதிமுருகன் முன்னிலை வகித்தார். பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், 
தி.க அன்புகரசன், நல்லாசிரியர் சிவபாலு, சமூக ஆர்வலர் அகமது முஸ்தபா, திமுக நகர துணை செயலாளர் அப்பாஸ்கான், இந்திய கம்யூனிஸ்ட் ரமேஷ்,
 நாட்டு மாடு நல சங்கம் கலைவாணன் , விசிக சார்பில் ஆண்டவர், தளபதி, சேகுவேரா, கருத்தையன், முருகன், ஜாபர் சேட்,திருமா சேகர், மணிபாரதி, சக்திவேல், வெற்றி, வேலு, ஸ்டாலின், பிரபாகரன், ஆனந்த், சக்திவேல், அரவிந்த், செல்லத்துரை, முருக பாண்டி, கார்த்தி ,வீரா, திரவியம் ,பழனிவேல், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விவசாயிகளின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

தேனி மாவட்ட செய்தியாளர் 
அ.வெள்ளைச்சாமி