அரசு குழந்தைகள் காப்பகத்தில் இந்தியன் ரெட்கிராஸ் இணைந்து தூய்மை சேவை திட்டம் விழிப்புணர்வு விழா
குழந்தைகள் காப்பகத்தில் ரெட்கிராஸ் இணைந்து
தூய்மை சேவை திட்டம் விழிப்புணர்வு விழா 
அரசு குழந்தைகள் காப்பகத்தில் ரெட்கிராஸ் இணைந்து
தூய்மை சேவை திட்டம் விழிப்புணர்வு விழா 
தமிழக அரசின் சமூகபாதுகாப்பு துறையின் குழந்தைகள் காப்பகத்தில் தூய்மை சேவை திட்ட விழிப்புணர்வு விழா காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்துடன் இணைந்து நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்வுக்கு இந்தியன் ரெட்கிராஸ் காட்பாடி வட்ட கிளையின் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கி பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது.  சுவச்சதா ஹய் சேவா என்கின்ற தூய்மை சேவை திட்டத்தினை மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் செப்டம்பர் 15ல் துவக்கி வைத்தார்.  தூய்மையான இந்தியா என்ற இலக்கினை அடைய குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் அரசுக்கு உதவ வேண்டும் என்ற அடிப்படையில் நாம் தூய்மையை பேணுவோம் நம் சுற்றுப் புறத்தினையும் தூய்மையாக வைத்திருப்போம் என்றார். முன்னதாக அரசினர் குழந்தைகள் காப்பக கண்காணிப்பாளர் கே.எ.சாந்தி வரவேற்று பேசினார். அவை துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி மேலாண்மைக்குழு உறுப்பினர் லிவிங்ஸ்டன் மோசஸ் எஸ்.எஸ்.சிவவடிவு ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.  
செயற்குழு உறுப்பினர்கள் டி.லிவிங்ஸ்டன் மோசஸ், சார்பாக செயலாளர் செ.நா-ஜனார்த்தனன் காப்பக மாணவிகளுக்கு மதிய விருந்து, மாணவிகளுக்கு தேவையான தட்டு டம்பளர் ஆகியவற்றை வழங்கினர்.  முடிவில் காப்பக பாதுகாவலர் விஜயா நன்றி கூறினார். அரசு குழந்தைகள் காப்பக மாணவிகளுக்கு காட்பாடி ரெட்கிராஸ் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், தூய்மை சேவை திட்டம் குறித்து விழிப்புணர்வு வழங்கிய போது எடுத்த படம் உடன் காப்பக கண்காணிப்பாளர் கே.எ.சாந்தி, துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி, பொருளாளர் வி.பழனி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் லிவிங்ஸ்டன் மோசஸ், எஸ்.எஸ்.சிவவடிவு ஆகியோர் உடனிருந்தனர்