ஆற்காடு மின்சார வாரியத்தில் மின்சார சிக்கன வார விழா..!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மின்சார வாரியத்தில் மின்சார சிக்கன வார விழா.!   பொதுமக்களுக்கு மின்சாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14-ம் தேதி முதல் டிசம்பர் 21 வரை கொண்டாடுவது வழக்கம்.அதன்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முதன்மை செயற்பொறியாளர் அறிவுறுத்தலின் பேரில் ஆற்காட்டில் செயற் பொறியாளர் கே.லதா கருணாகரன்  தலைமையில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் மின்சார சிக்கன வார விழா நடந்தது. இதில் ஆற்காடு நகர உதவி செயற் பொறியாளர் ஜி.தனலட்சுமி, ஆற்காடு நகர உதவி பொறியாளர் ஆற்காடு கிழக்கு மேகநாதன் ஆகியோர் பொதுமக்களிடையே மின்சிக்கனம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்-களை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 


ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..