ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் தனது பாக்கெட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு திமிராக செயல்படும் வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் காளியப்பன் வசூல் தர்பார்..?

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் தனது பாக்கெட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு திமிராக செயல்படும் வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் காளியப்பன் வசூல் தர்பார்..?
வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பொதுமக்கள் நாள்தோறும் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், புது வாகனங்கள் பதிவு செய்தல், வாகன உரிமையாளர்கள் பெயர் மாற்றம் செய்தல், வாகன தகுதி சான்றிதழ் அனுமதி சான்றிதழ் அனுமதி சார்ந்த புதுப்பித்தல், ஆகிய பல்வேறு வேலைக்காக நாள்தோறும் பொதுமக்கள் எப்பொழுதும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர் இங்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலராக இருப்பவர் காளியப்பன் இவரின் கண்ட்ரோலில் உள்ளதுதான் ஆம்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் இங்கு வாகன ஆய்வாளர்களும் உண்டு ஆனால் சில மாதங்களாக ஆய்வாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது இதனால் ஆம்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாரத்திற்கு இரண்டு நாள் ஒரு நாள் என கணக்கிட்டு வேலை செய்து வருகிறார் வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன் இவருக்கு கீழே பணிபுரியும் சூப்பிரண்டு மற்றும் அலுவலக ஊழியர்கள் என்ன கூறுகிறார்களோ அதற்கு செவி சாய்ப்பதுயோடு இடைத்தரகர்கள்  மூலமாக எல்எல்ஆர் போட்டால் தனி ரேட். எவ்வி லைசன்ஸ் பெறுவதற்கு தனி ரேட் என நிர்ணயம் பணத்தை கறந்துவிடுவார்கள் லஞ்சப் பணத்தை வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் காளியப்பனுக்கு சேரவேண்டியதை ஒதுக்கி வைத்து விடுவார்களாம் என்று கூறப்படுகிறது மேலும் வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பனிடம் நேரடியாக வாகன ஓட்டுனர்கள் வந்தால் எந்தவித வேலையும் நடக்காது பயிற்சிப்பள்ளி நடத்தும் உரிமை யாளர்கள் தான் இவருக்கு புரோக்கர்கள் இவர்கள் மூலமாக வந்தால் மட்டுமே எந்தவித வேலையும் சுலபமாக முடிந்து விடுமாம் இல்லையென்றால் தகுதியான சான்றுகளுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் கூட ஏதாவது ஒரு காரணம் சொல்லி தள்ளுபடி செய்து விடுவாராம் வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன் இதனால் மற்ற வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணி செய்து வரும் (ஆர்.டி.ஓ) காளியப்பனின் நண்பர்கள் உன்னைப்பற்றி பத்திரிக்கைகளில் தொடர்ச்சியாக பல பத்திரிகைகளில் லஞ்சம் வாங்குவதாக செய்தி வந்துக் கொண்டிருக்கிறது நீ உஷாராக இரு நேரம் சரியில்லை திடீரென ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸ் துறையினர் ரெய்டு செய்கிறார்கள் என்று சொல்லும்போது நான் தமிழகம் முழுவதும் பணியாற்றி உள்ளேன் எனக்கு தெரியாதா பத்திரிக்கையாளர்களும் மற்றும் அரசியல்வாதிகளும் இல்லை அதுபோக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸ் துறையில் உள்ள சில அதிகாரிகளுக்கும் நான் மாதம் மாதம் கப்பம் கட்டி கொண்டு தான் வருகின்றேன் என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்கிறாராம் வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன் இவர் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவதை பார்த்தால் வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன் சொல்வது உண்மையாக இருக்குமோ என்று பேசிக் கொள்கின்றனர் மற்ற வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி நிர்வாகிகளும். அது சரி பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்பது சும்மாவா சொன்னார்கள்.சில ஆண்டுகளுக்கு முன்பு வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம் மீண்டும் அரங்கேறுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் மற்றும் கண்காணிப்பு போலீசார் திடீரென விசாரணை மேற்கொண்ட நிலையில், அருகில் உள்ள இடைத்தரகர்கள் கடைகளை மூடிவிட்டு ஓட்டம் பிடித்தனர். வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 2015-16ம் ஆண்டு அசோகன் என்பவர் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றியபோது. ஊழல் மற்றும் கண்காணிப்பு போலீசார் நடத்திய சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது இதன் மீதான விசாரணை நிலுவையில் இருந்த. நிலையில் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் இருந்த இடைத்தரகர்கள் கடைகளை மூடி விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. மீண்டும் அது போன்ற சம்பவம் நடைபெறுமா என்று சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்