சேலம் மாவட்டம் சிவதாபுரம் அருகே ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து துணைத்தலைவர் தலைமையில் தர்ணா.
சேலம் மாவட்டம் சிவதாபுரம் அருகே சேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டிபட்டி ஊராட்சி மன்றத்துக்கு உட்பட்ட மொத்தம் 9.வார்டு உள்ளது.
இங்கே தமிழரசி  என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். துணைத்தலைவராக அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் பதவி வகிக்கின்றனர். இந்த நிலையில் ஆண்டிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 7 வார்டுகளுக்கு மட்டும் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுப்பதில்லை என கடந்த 11ம் மாதமாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதுகுறித்து பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர் இடமும் கடந்த மாதம் சேலம் மாவட்ட ஆட்சியர் இடமும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத இருந்து வந்ததால்  ஆண்டிபட்டி ஊராட்சி மன்ற துணை தலைவர் அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் வெங்கடாஜலம், திருவண்ணாமலை கலைச்செல்வி, வனிதாமணி, சகுந்தலா, வெள்ளையம்மாள் உட்பட மொத்தம் 7. உறுப்பினர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில் நாங்கள் வெற்றி பெற்று கடந்த 11 மாதத்திற்கு மேல் ஆகிறது இது வரை ஊராட்சி மன்றத்தில் கிராம சபை கூட்டம் நடத்தவில்லை, ஊராட்சி மக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகளை தலைவர் முறையாக செய்யவில்லை, தற்போது மழை காலத்திலும் இப்பகுதியில் தண்ணீர் பிரச்சினை தலை விரித்து ஆடுகிறது. அதை தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, ஊராட்சியில் வரவு-செலவு மாதாந்திர பதிவேடுகளை மற்ற உறுப்பினர்களுக்கு காமிப்பது கிடையாது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர் .மேலும் ஊராட்சி மன்ற துணை தலைவர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு வாக்களித்த உறுப்பினர்கள் உள்பட மொத்தம் 7 வார்டுகளுக்கு மட்டும் அடிப்படை தேவைகள் செய்யாமல் தலைவர் இருந்து வருகின்றார். அதுமட்டுமில்லாமல் வெற்றி பெற்ற தலைவர்  தமிழரசி ஆனால் ஊராட்சிமன்ற நிர்வாகத்தில் தலையிடுவது அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட நபர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஊராட்சி மன்ற அலுவலகம் பக்கமே  தலைவர் வருவதில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும் இது தொடர்பாக கடந்த 7ஆம் தேதி தமிழக  முதல்வருக்கு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சேலம் ஒன்றிய மண்டல அலுவலர் உமாசங்கர் நிகழ்விடம் வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக வும் விரைந்தே அடிப்படை தேவைகளை செய்யாமல் இருந்து வந்தால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர். இதனால் ஆண்டிபட்டி ஊராட்சி பகுதியில் தலைவரை கண்டித்து துணைத்தலைவர் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது..    *இளம்பிள்ளை நிருபா் சுதாகா்*