அதிமுக கூட்டணியில் அரூர் தொகுதியை பாஜகவுக்கு பெறுவோம்
அதிமுக கூட்டணியில் அரூர் தொகுதியை பாஜகவுக்கு பெறுவோம்


அரூர் அ.தி.மு.க கூட்டணியில் அரூர் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியை பாஜகவுக்கு கேட்டு பெறுவோம் என அந்தக் கட்சியின் தொகுதி மேலிடப் பொறுப்பாளர் கே.முத்துசுவாமி தெரிவித்தார்
இது குறித்து அவர் அரூரில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் அரூர் சட்டப் பேரவைத் தொகுதி தனித் தொகுதியாகும். இந்த தொகுதியில் மலைவாழ் பழங்குடியின மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கின்றனர். ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசின்
திட்டங்களை கொண்டு செல்வதற்காக அதிமுக கூட்டணியில் அரூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியிடுவதற்காக இந்த தொகுதியை கேட்டுப் பெறுவோம். அரூர் தொகுதியில் ஏராளமான தொகுப்பு வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் இங்குள்ள மக்களுக்கு பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் கூடுதல் வீடுகளை பெற்றுத் தருவோம். அரூரில் அரசு வேளாண்மை கல்லூரி தொடங்க பாஜக சார்பில் முயற்சிகளை மேற்கொள்வோம். காவிரி ஆற்றின் உபரி நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகள், ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை நிரப்ப பாஜக சார்பில் நடவடிக்கை எடுப்போம் என்றார்.