ராணிப்பேட்டை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வரவழித்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப் பட்டது
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மற்றும் சங்கிலி ஆகிய மாவட்டங்களிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் பயன்பாட்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வட்டாட்சியர்கள் கோபாலகிருஷ்ணன் மற்றும் மதிவாணன் தலைமையில் 11 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் காவல்துறை பாதுகாப்புடன் எடுத்து வந்துள்ளனர். எடுத்து வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கிளாஸ்டன் புஷ்பராஜ், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறந்து மாவட்ட அளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் பாதுகாப்பாக வைக்க உத்தரவிட்டுள்ளார். முன்னதாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறையில் 24  மணிநேர ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்பு  குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் எடுத்துரைத்தார். அரசியல் கட்சி பிரதிநிதிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை பார்வையிட்டனர். மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரத்தின் பேலட் யூனிட் 2530, கண்ட்ரோல் யூனிட்1930
விவிபாட் 2090 எண்ணிக்கையில் பெறப்பட்டு பார்கோட் ஸ்கேனிங் மூலம் சரி பார்க்கப்பட்டு அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வைப்பு அறையில் வைத்து சீல் செய்யப்பட்டது. 

இராணிபேட்டை மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...