திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நெகிழ வைத்த செயல்கள் மக்கள் பாராட்டுக்கள் குவிந்தன இப்படியும் ஒரு மாவட்ட ஆட்சியரா..
தம்பி தங்கைகளுடன் நிர்கதியாய் நின்ற இளம் பெண்ணுக்கு மனிதநேய உதவி, இப்படியும் ஒரு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி..
   
திருவண்ணாமலை ஆரணியில் தாய் தந்தையை இழந்து அனாதையாய் தம்பி தங்கைகளை காக்கவேண்டிய நிர்கதியான நிலையில் இருந்த இளம்பெண்ணுக்கு அரசு வேலை வழங்கி, தம்பி தங்கைகளின் கல்விச்செலவுக்கும் உதவி, மதியம் அவர் வீட்டில் உணவுண்ட ஆட்சியர் கந்தசாமியின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கனிகிலுப்பை கிராமத்தில் வசித்து வந்தவர் வெங்கடேசன். இவருக்கு அனிதா என்ற மனைவியும் ஆனந்தி (19) என்ற மகளும், 17 வயதில், 15 வயதில் ஒரு பெண்ணும், ஆணும் உள்ளனர். வெங்கடேசன் நெசவாளராக இருந்தார். சொந்தமாக நெசவு செய்ய வழியில்லாமல் கூலித் தொழிலாளியாக வாழ்க்கை நடத்தி வந்தார். குடும்ப வறுமை காரணமாக மனைவி அனிதா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்தார். அனிதா சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வந்த சொற்ப வருமானத்தில்தான் உணவும், குழந்தைகள் கல்வி பயில முடிந்தது. மனைவி அனிதா மறைந்ததால் வெங்கடேசன் முடங்கிப் போனார். மன உலைச்சாலில் அவரும் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதனால் குடும்பத்தின் மொத்த பாறமும் அமுதாவின் தலையில் விழுந்தது. அனிதாவின் தாயரான பாட்டி ராணியின் பராமரிப்பில் அவர்கள் வாழ்ந்துவந்தனர். வறுமை காரணமாக அமுதாவும், அவரது தங்கையும் விவசாய கூலி தொழிலாளிகளாக மாறினர்.
தம்பி மீது வறுமையின் நிழல் விழாமல் அவரை படிக்க வைக்கின்றனர், அவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மூன்று பேரன் பேத்திகளுக்கு ஆதரவாக இருந்த பாட்டி ராணியும் வயோதிகம் காரணமாக கடந்த மாதம் காலமானார். இதனால் அனாதைகளாக்கப்பட்ட ஆனந்தியும் அவரது தங்கை, தம்பியும் திகைத்து போயினர். ஆதரவுக்கு யாரும் இல்லாத நிலையில் மூவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். அப்போது ஊரில் உள்ள சிலர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் உன் குறைகளை சொல்லும்மா, அவர் நல்ல மனிதர் ஏதாவது உதவி செய்வார் என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் தனது பிரச்சினையை மனுவாக எழுதி கடந்த மாதம் 13-ம் தேதி மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு வந்த ஆனந்தி, அழுதபடியே மனுவுடன் நின்றுள்ளார். இதைப்பார்த்த மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி, அருகில் அழைத்து அவரது நிலையை கேட்டறிந்தார். கதறி அழுது எங்கள் குடும்பம் வறுமை நிலையை உள்ளேம், நாங்கள் ஆதரவற்ற நிலையைல் ஆனந்தியும் அவரது தங்கை, தம்பியும் கூற கட்டாயம் ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கிறேன் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி கூறியுள்ளார். ஆனந்திக்கு ஏதாவது செய்து அவர் வாழ்க்கையில் உதவ வேண்டும் என முடிவெடுத்த ஆட்சித் தலைவர் அவருக்கு அவரது அம்மா வேலைப்பார்த்த சத்துணவு அமைப்பாளர் வேலை வழங்க இடமுள்ளதா என ஆராய்ந்தபோது 21 வயது ஆனால்தான் வேலை என்று அதிகாரிகள் கைவிரித்துள்ளனர்.
அதுவரை அந்த குடும்பம் தாங்காது வறுமையில் அழிந்துவிடும், அந்த சிறுவன் படித்து வருகிறான் அவன் படிப்பும் பாதிக்கக்கூடாது என்று முடிவெடுத்த  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்தியின் நிலையை விளக்கி தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதி ஆனந்திக்காக அரசின் நிலையிலிருந்து விதிவிலக்கு பெற்றார். கருணை அடிப்படையில் ஆனந்திக்கு சத்துணவு அமைப்பாளர் பணியாணை வழங்க உத்தரவு கேட்டார். அதற்கு அனுமதி கிடைத்தது. உடனடியாக களத்தில் இறங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி, ஆனந்திக்கான பணியாணையை தயார் செய்தார். உடனடியாக அதை எடுத்துக்கொண்டு நேரில் சென்று ஆனந்தியிடம் வழங்கினார். ஆனந்தி சொல்ல வார்த்தை இன்றி கதறி அழுதார். அவரைத் தேற்றிய ஆட்சித் தலைவர் இன்று மதிய உணவு உங்களுடன்தான் என்று கூற ஆனந்தி திகைத்தார். கவலை வேண்டாம் அனைத்தும் ஏற்பாடு செய்துவிட்டேன் என்று கூறி மதிய உணவை தன் செலவில் வரவழைத்து ஆனந்தியின் தம்பி தங்கைகளுடன் அவரது வீட்டில் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.பின்னர் ஆனந்தியிடம் சத்துணவு அமைப்பாளர் வேலை தவிர என்ன வேண்டும் என்று கேட்க அவர் தமிழ் இளங்கலை படிக்கவேண்டும் என சொல்ல தொலைதூர கல்வி மூலம் பயில மூன்று ஆண்டுகளுக்கான செலவுத் தொகையை ஏற்றுக்கொண்டார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி. மேலும் ஆனந்தியின் தங்கை பிஎஸ்சி பயோ வேதியியல் மூன்று ஆண்டுகளுக்கு தனியார் கல்லூரியில் பயில ஏற்பாடு செய்து அதற்கான கட்டணம் இல்லாமல் படிக்க வைக்க பரிந்துரைத்தார். சாப்பிட்டப்பின் ஆனந்தியின் வீட்டை சுற்றிப்பார்த்தார் ஆட்சித்தலைவர் தான் கொண்டு வந்திருந்த திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் விபூதி, குங்குமம் பிரசாதத்தை அளித்தார். இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்று பள்ளிக்கு செல்லும் ஆனந்தியின் தம்பிக்கு சைக்கிள் வழங்கிய அதைவிட முக்கியமான ஆச்சர்யத்தை அவர்களுக்கு அளித்தார்.

தமிழ்நாடு அரசின் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஆனந்தி வீட்டை கட்டித்தரும் கட்டுமான பணிக்கான ஆணையை வழங்கி தொடங்கி வைத்தார். சாதாரண மனு தானே என்று விட்டுவிடாமல் அனாதரவாக இருந்த இரண்டு பெண் குழந்தைகள், ஒரு சிறுவனுக்கு பெற்றோர் அந்தஸ்தானத்தில் உதவி செய்த மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

ஆட்சித்தலைவர் கந்தசாமியின் செயலால் இனி அந்த குடும்பம் வறுமை நீங்கி வாழ்வின் அடுத்த கட்டத்தை அடையும் என்பதில் சந்தேகமே இல்லை. தமிழகத்தில் சில மாவட்ட ஆட்சித்தலைவர் செயல்கள் சிறந்த அதிகாரிகளை நாம் பெற்றுள்ளதை பறைச்சாற்றுகிறது