தேனி மாவட்டத்தில் முடி திருத்துவோர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் முடி திருத்துவோர் நலச் சங்கம் சார்பில் விருதுநகர் உலக்குடியில் தலித்களுக்கு முடி வெட்டியதற்காக ராஜா என்பவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் முடி திருத்தும் தொழிற்சங்கத்தினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்..


தேனி மாவட்ட செய்தியாளர்
 அ.வெள்ளைச்சாமி