இந்தியாவில் தொடரும் பொருளாதார வேட்டை
இந்தியாவில் தொடரும்_வேட்டை

இந்தியாவில் பொருளாதார மந்தநிலை நீடித்த 2019ல், பொருளாதார சரிவுக்கு யார் காரணம் என பலத்த விவாதங்கள் நடைபெற்ற போது தமிழகத்தில் சத்தமில்லாமல் 5,000க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டு வாழ்க்கையை முடித்துக்கொண்டார்கள்.

இந்தியாவில் சராசரியாக தினமும் 320 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அந்த 320 பேரில் தான் இந்த தினக்கூலி மக்கள் இருக்கிறார்கள்.

செப்டம்பரில் வெளியாகிய இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட 32,5631தினக்கூலி தொழிலாளர்களில், 5,186 தொழிலாளர்கள் தமிழகத்தில் இறந்துள்ளனர் என பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் தினக்கூலியாக வேலைசெய்பவர்கள் அதிகம் இருப்பது கட்டட தொழிலில் தான். அவர்கள் வாங்கிய கடனை செலுத்த முடியாத காரணத்தால் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்கிறார் கட்டட தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் கீதா ராமகிருஷ்ணன்.

''மருத்துவ செலவு மற்றும் திருமணத்திற்காக செலவு செய்வதற்கு தினக்கூலி வேலையில் உள்ளவர்கள் கடன் பெறுகிறார்கள். வங்கிகளில் கடன் தருவதில்லை என்பதால், இவர்கள் தனியார் நிதி நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் கந்துவட்டிக்காரர்களிடம் கடன் வாங்குகிறார்கள். பணமதிப்பிழப்பில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கட்டடத்தொழிலாளர்கள் உள்ளிட்ட தினக்கூலி தொழிலாளர்கள் தான்.

 இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பணத்தை நேரடியாக கூலியாக வாங்கும் எளிய மக்கள் என்பதை உணராமல் கொண்டு வந்த பணமதிப்பிழப்பின் தாக்கத்தை தான் நாம் இப்போது பார்க்கிறோம். 

கூடவே, ஜிஎஸ்டி என்ற வரியை கொண்டு வந்ததால், கடன் வாங்கி சுயதொழில் செய்து வந்த லட்சக்கணக்கான 3 - 10 ஆட்கள் பணியாற்றி வந்த சிறு குரு தொழில்கள் அழிந்தன. இதனால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வு சூனியமானது.  

இந்த பொருளாதார வாழ்வாதார ஆழ்ந்திருந்த நேரத்தில் தான் கொரோனா என்ற தொற்று பேரிடியாக வந்தது. ஏற்கனவே, சாதாரண மக்களை பொருளாதார சரிவு காவு வாங்கிகொண்டிருந்த நிலையில் தற்போது கொரோனா மேலும் தனது வேட்டையை நடத்தி வருகிறது..