தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று ஒரே நாளில் 7 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் ஐதிறந்து வைத்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
2 கோடி மதிப்பிலான பணி முடிக்கப்பட்ட திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
போடி சட்டமன்ற உறுப்பினரும் தமிழகத்தின் துணை முதலமைச்சருமான .ஓ.பன்னீர்செல்வம் அவரது சொந்த தொகுதியான போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, போடிஅம்மாபட்டி, பொட்டிப்புரம், உப்புக்கோட்டை, கூழையனூர், அம்பாசமுத்திரம், ஆகிய 7 இடங்களில் இன்று அம்மா மினி கிளினிக் களை திறந்து வைத்தார். மேலும் போடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கோடாங்கிபட்டி, சில்லமரத்துப்பட்டி, அம்மாபட்டி, ஆகிய மூன்று கிராமங்களில் கட்டப்பட்ட மூன்று அங்கன்வாடி மையங்கள் மற்றும் கோடாங்கிபட்டியில் ஒரு கால்நடை மருந்தகம், சிலமலையில் சுகாதார செயல்விளக்க பூங்கா, ராசிங்காபுரம் பேருந்து நிலையம் மற்றும் நாகலாபுரத்தில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி என போடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சுமார் 2 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட திட்டங்களையும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே. ஜக்கையன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவிபல்தேவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தேனி மாவட்ட செய்தியாளர் அ.வெள்ளைச்சாமி