சுற்றுச்சூழல் துறையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது விஜிலென்ஸ் ரெய்டு ...
சுற்றுச்சூழல் துறையில் கட்டு கட்டாக பணம் : தமிழகத்தில் அதிகாரிகள் ஆட்சியா  என்ன நடக்குது இங்கே? என்று சமூக ஆர்வலர்கள் வேதனை 
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடி வரும் நிலையில், உருவாகி உள்ளது சேலம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் அதிகாரியின் வீடு மற்றும் அலுவலகத்தில், நடந்த சோதனையில், கட்டு கட்டாக பணம், வைரம், தங்கம் என, எக்கச்சக்கமான நகைகளும், 10 கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்களும் சிக்கியுள்ளன. இதனால், 'என்ன நடக்குது இங்கே?' என்று, சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து, கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தொடரும் லஞ்சம் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் வேதனைை அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் லஞ்சம் வாங்குபவர்களை தூக்கிலிட வேண்டும் என்று சமீபத்தில் கருத்து பதிவிட்டனர். தொடரும் லஞ்ச லாவண்யத்தை கட்டுப்படுத்த, முதல்வர் இ.பி.எஸ்., அவசர கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார், அக்டோபரில், வேலுார் மாவட்டம், காட்பாடியில் உள்ள, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.அங்கு, இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றி வரும், பன்னீர் செல்வம், 51, என்பவரின் வீடு மற்றும் அலுவலகத்தில், 19 மணி நேரம் சோதனை நடந்தது.அதில், 3.25 கோடி ரூபாய் ரொக்கம், 3.6 கிலோ தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள்; 20 கோடி ரூபாய் மதிப்புள்ள, 90 சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
என்பது குறிப்பிடத்தக்கது லஞ்ச ஒழிப்பு போலீசார் தனது கடமையை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்