திருப்பூரில் பதிவுத்துறையில் நடந்த முறைகேட்டில் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் மீது அடுத்தடுத்து பல குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன
திருப்பூர் மாவட்டத்தில் நிலை.1 மற்றும் நிலை.2 உள்ளிட்ட பல்வேறு சார்பதிவாளர் அலுவலகங்களில், பதிவுத்துறைக்கான ஸ்டார் 2.0 ஆன்லைன் இணையதளத்தில் ரசீதுகளை 'கேன்சல்' செய்து, பல கோடி ரூபாய் பணம் கையாடல் செய்திருப்பது கண்டறியப்பட்டது.
5 பேர் சஸ்பெண்ட் நிலையில்
இதில் நேரடியாக தொடர்புடைய பதிவுத்துறை உதவியாளர்கள் இருவர் உட்பட ஐந்து பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போலீஸ் புகாரும் தரப்பட்டுள்ளது. இந்த முறைகேடு குறித்து விசாரிப்பதற்கு, பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி., நல்லசிவன் தலைமையில், தொழில்நுட்பக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு,விசாரணையைத் துவக்கியுள்ள நிலையில், குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் குறித்து அடுத்தடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறுகின்றனர்
இந்த விசாரணைக் குழுவின் உறுப்பினராகவுள்ள திருப்பூர் ஏ.ஐ.ஜி.,ராமசாமியும், கவனக்குறைவிற்காக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள மாவட்டப் பதிவாளர் விஜயசாந்தியும் உறவினர்கள்.நான் கூறப்படுகிறது
இந்த முறைகேட்டில் நேரடியாகத் தொடர்புடைய சங்கர் மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோருக்கு குழுவின் தலைவரான நல்லசிவன் உறவினர் என்றும் கூறப்படுகிறது.
அவர் ஈரோட்டுக்கு வரும்போது எல்லாம் இவர்கள் இருவருமே அவருக்கு அனைத்து பணிவிடைகளையும் செய்துவந்ததாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன நிலையில்.
பதிவுத்துறைக்கான சர்வரை நிர்வகிப்பவர்களும், நல்லசிவனின் அதிகாரத்துக்கு உட்பட்டவர்களாக இருப்பதால், இந்த இருவர் செய்த பல்வேறு முறைகேடுகளையும் மொத்தமாக அழித்து விடவும் வாய்ப்புள்ளதாகவும் பதிவுத்துறை அலுவலக வட்டார ஊழியர்கள் கூறுகின்றனர் இதனால், தற்போது நியமிக்கப்பட்டுள்ள குழுவைக் கலைத்துவிட்டு, வேறு துறையைச் சேர்ந்த நேர்மையான ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமித்து, விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. திருப்பூரில் மூன்று ஆண்டுகளுக்கு முன், மூன்று மாதங்களில் பதிவான, 2,500க்கும் அதிகமான பதிவு விபரங்கள் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டதன் மர்மம் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்பதே, நேர்மையான அலுவலர்கள் விசாரணைக்கு அமைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும். தமிழக பத்திரப்பதிவுத்துறை தலைவர் மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் நடவடிக்கைகள் மேற்கொள்ள படுவார்களா. சட்டம் தன் கடமையை செய்யும் பொறுத்திருந்து பார்ப்போம்