சிகிச்சை குறைபாட்டால்
நோயாளிகள் பெரும் அவதி
நடவடிக்கை எடுப்பாரா
மாவட்ட ஆட்சியர் !
வாலாஜாபேட்டை அரசு
மருத்துவமனையில்
சிகிச்சை குறைபாட்டால்
நோயாளிகள் அவதிப்பட்டு
வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று
கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜாபேட்டையில்
அரசு மருத்துவமனை
இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை ராணிப்பேட்டை மாவட்டத்தின்
தலைமை மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனை அண்மையில் நவீன முறையாக்கப்பட்டது.
ஆனாலும், நோயாளிகளுக்கு தேவையான வசதிகளில்குறைபாடு இருக்கிறது என்றும், நோயாளிகள் சரியாக கவனிக்கப்படுவதிலலை என்றும் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மேலும் இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளை கவனிப்பதற்கு ஒப்பந்த ஊழியர்கள்தான் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் சரியாக நோயாளிகளுக்கு பதில் அளிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இரவு நேரப் பணியில் இருக்கும் செவிலியர்கள் நோயாளிகளை கவனிக்காமல் அலட்சியமாக இருப்பதாகவும் தெரிகிறது. அங்கு வரக்கூடியவர் களை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அங்குள்ளவர்கள் சொல்வதாக நோயாளி களே புகார் கூறுகின்றனர். இது குறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.