தமிழக அரசுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் அனுப்பியிருக்கும் கடிதத்தில்,
தமிழகத்தில் 6 மாதங்களில் ஓய்வு பெற உள்ள எந்தவொரு அரசு அதிகாரிகளுக்கும் தேர்தல் பணி வழங்கக் கூடாது.
தேர்தல் பணியாற்றும் அதிகாரிகள் அவரது சொந்த மாவட்டங்களில் பணியாற்றக் கூடாது.
முந்தைய தேர்தல்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளை தேர்தல் பணிக்கு நியமிக்க வேண்டாம் என்பது உள்ளிட்ட சில அறிவுறுத்தல்களை தெரிவித்துள்ளது.