திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 இடங்களில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்தார்
திருப்பத்தூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 6இடங்களில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைக்கிறார்

தமிழகத்தில் கிராமப்புற பகுதியில் 2000ஆயிரம் அம்மா மினி கிளினிக் திட்டத்தை தமிழக முதல்வர். எடப்பாடி. கே.பழனிச்சாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 14 அம்மா மினி க்ளினிக் அமைக்கப்படுகிறது.

இதனையடுத்து முதற்கட்டமாக இடையம்பட்டி, பொன்னேரி, விசமங்களம், மாடப்பள்ளி, பெருமாபட்டு, பூங்குளம் ஆகிய 6 இடங்களில் அம்மா மினி க்ளினிகை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் ஆகியோர் திறந்து வைக்கின்றனர்.

 ஜோலார்பேட்டையில் உள்ள இடையம்பட்டியில் அம்மா மினி க்ளினிகை வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறை  அமைச்சர் கே.சி.வீரமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்த நிலையில் உடன் தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். விஜயகுமார், மருத்துவர் சுமதி, ஜோலார்பேட்டை நகர செயலாளர் S.P.சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமான மருத்துவ அலுவலர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.