அருணாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1ஆகப் பதிவாகியுள்ளது


அருணாச்சலப் பிரதேசத்தின் சுபன்சிரி பகுதியில் 3.1 ரிக்டர் அளவில் இலேசான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது.

இந்திய நில அதிர்வு மையம் வெளியிட்டத் தகவலின்படி,

இன்று இரவு 8 மணியளவில் ரிக்டர் அளவில் 3.1ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அருணாச்சலப் பிரதேசத்தின் சுபன்சிரி பகுதியில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.