விஸ்வகர்ம ஜெகத்குரு ஶ்ரீநந்தல் மடலாயத்தின் 1420ஆம் ஆண்டு குரு பூஜை விழா
விஸ்வகர்ம ஜெகத்குரு ஶ்ரீநந்தல் மடலாயத்தின்  1420ஆம் ஆண்டு குரு பூஜை விழா தமிழகத்தில் 1400 ஆண்டுகளுக்கமுன் தோன்றிய மிக பழமையான அகில பாரத விஸ்வகர்ம மடாலயம், திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், காந்தப்பாளையத்தில் அமைந்துள்ள அகிலபாரத விஸ்வகர்ம ஜெகத்குரு மாகாசன்னிதானம் ஶ்ரீநந்தல் மடாலயத்தின் 65 பீடாதிபதி ஶ்ரீஶ்ரீஶ்ரீ.சிவராஜ ஞானாச்சாரிய குரு சுவாமிகள் தலைமையில் 1420ஆம் ஆண்டு குரு பூஜை விழா மிக சிறப்பாக நடைபெற்றது. 
பர்வத திருமூலாரண்ய திவ்யசேத்ர கண்ணுவ மகரிஷி ஆஸ்ரம மிருகண்ட நதி மனு, மய, துஸ்ட, சில்பி, விஸ்வக்ஞாதி விஸ்வகர்ம மகத்துவ ஜெகத்குரு ஆதி சிவலிங்காச்சார்ய மூர்த்திகட்கு 1420 ஆண்டு குருபூஜை விழா அபிஷேக ஆராதானையுடன் துவங்கியது.  
குருபூஜா விழாக்குழு தலைவர் கோ.விஸ்வநாதன், ஓய்வுபெற்ற மாவட்டக்கல்வி அலுவலர் தேவ.ஆசைத்தம்பி திருச்சி விக்னேஷ் என்.சுவாமிநாதன், தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலசங்க தலைவர் சி.தேஜோமூர்த்தி, அமைப்புச்செயலாளர் வே.குப்புசாமி ஆச்சாரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தட்சிணபாரத பௌரோகித சங்கத்தின் சார்பில் செயலாளர் ஜோதிமுருகாச்சாரி மற்றும்  ஆதி சிவலிங்கேஸ்வர வேதபாடசாலை வித்தியார்த்திகள் சார்பிலும் வைதிக  கர்மாக்கள் செய்தனர். 
திருமுறை இன்னிசை கச்சேரி, சொற்பொழிவு, குழுவினரின் அருள் இசை பாடப்பட்டது. ஆதீன விருது வழங்கும் விழா மாலையில் நடைபெற்ற ஆதீன விருது வழங்கும் விழாவில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி.எம்.தமிழ்செல்வன்,  தட்சிணாமூத்தி ஸ்தபதி, டாக்டர் கே.கனகராஜ், உள்ளிட்டோர் பேசினர். திருப்பதிகை ரெங்கநாத ஸ்தபதி, சென்னை நாகராஜ ஸ்தபதி ஆகியோர் உள்பட 9 பேருக்கு 65வது பீடாதிபதி சிவராஜ ஆச்சாரிய குரு சுவாமிகள் அவர்களால் ஆதீன விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
ஆதீன வேதபாடசாலை ஆண்டு விழா
ஆதீன வேதபாடசாலை முதல்வர் சிவ.சிவஞானசேகரன் 14ஆம் ஆண்டின் அறிக்கை வாசித்தார்.  ஆதின பாடசாலையில் புதியதாக 7 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.  ஆந்திர மாநிலம் தெனாலி படாசாலை மற்றும் கர்நாடக மாநில விஸ்வகர்ம பௌரோகிதர்கள் பங்கேற்றனர். அன்ன தானம்
ஆத்தூர் மாணிக்கம் மற்றும் குழுவினரின் சார்பில் விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.  விழா ஏற்பாடுகளை குருபூஜா விழாக்குழுவினரும், திருப்பணிக்குழுவினரும், ஆதீன பரிபாலன சபாவினரும் செய்திருந்தனர். 
பென்னாகரம் மருத்துவர் கே.கனகராஜ், பாரத தொலை தொடர்புத்துறை பொறியாளர் அருப்புக்கோட்டை ராஜேந்திரன் ஓமலூர் மாணிக்கவேல் செய்தித்தொடர்பாளர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன், தலைமையாசிரியர் விழுப்புரம் த.பாலு, திருப்பதிராஜன், நாகர்கோவில் கிருஷ்ணன், கும்பகோணம் சொக்கலிங்கம், யுவராஜ், பேரையூர் கோவில் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 1420ஆம் ஆண்டு குருபூஜா விழாவில் விஸ்வகர்ம ஜெகத்குரு 65வது பீடாதிபதி சிவராஜ ஆச்சாரிய குருசுவாமிகள் ஆதீன விருது வழங்கிய போது எடுத்தப்படம் உடன் குருபூஜா விழாக்குழு தலைவர் கோ.விசுவநாதன், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி.எம்.தமிழ்செல்வன் ஆகியோர்.