விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் நிகழ்ச்சி 10 ஆண்டுகளாக சூழல் நிதியை அதிமுக அரசு வழங்கவில்லை சுய உதவிக்குழு பெண்கள் குமுறல்
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் நிகழ்ச்சி 10 ஆண்டுகளாக சூழல் நிதியை அதிமுக அரசு வழங்கவில்லை  சுய உதவிக்குழு பெண்கள் குமுறல்



கடந்த 10 ஆண்டுகளாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கவில்லை என சுரண்டையில் நடந்த விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியில் மகளிர் சுயஉதவி குழு பெண்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத் தினார்கள். சுரண்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுக்கள் பெண்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். சுரண்டை நகர செயலாளர் ஜெயபாலன் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வரவேற்றார். மாநில விவசாய அணி இணைச் செயலாளர் அப்துல் காதர் முன்னிலை வகித்தார்.திமுக மாநில விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் கலந்துரையாடினர். அப்போது மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு சுய உதவிக் குழுக்களுக்கு வழங்க வேண்டிய சூழல் நிதியை வழங்கவில்லை.திமுக ஆட்சிக்காலத்தில் மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது இது தொழில் செய்வதற்கு வழிகாட்டியாக அமைந்தது தற்போது அத்தகைய தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை என பெண்கள் தங்கள் குமுறலை வெளியிட்டனர். மேலும் மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு 2021ஆன்டு  திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இருசக்கர வாகனம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து பேசிய மாநில விவசாய அணி செயலாளர் விஜயன் உங்கள் கோரிக்கையை அனைத்தும் நாளைய தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்து குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.ரூபாய்.7000 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்த ஒரே இயக்கம் திமுக இயக்கம்.1989ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதியால் கிருஷ்ணகிரியில் மகளிர் சுய உதவி குழு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.இன்று அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க காரணமாக இருப்பது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்பதில் பெருமை கொள்கிறோம் என தெரிவித்தார்.தொடர்ந்து விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் மண்வெட்டிகள்,முருக பக்தர்களுக்கு வேஷ்டி சட்டைகள்,விளையாட்டை ஊக்கப்படுத்த விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், செல்லத்துரை, சுரண்டை நகர நிர்வாகிகள் ஆறுமுகச்சாமி, என்.எஸ். சுப்பிரமணியன்,ராஜேந்திர செல்வன், சங்கரநயினார், செல்வன், சாமுவேல் மனோகர், வைகை கனேசன், ஜேம்ஸ், தினேஷ், சுரேஷ், எழில், மெரிட்டன், செய்திமாடசாமி, சுசிலா, முத்துக்குமார், பிரேம்குமார், பூ.கோமதிநாயகன், சசிகுமார் முத்து, சுப்பிரமணியன், பவுன்ராஜ்,
பண்டாரம், சாமி, முருகன், செல்லத்துரை, சண்முகசுந்தரம், ஐயப்பன், வேல்சாமி செந்தில்குமார், சுடலைமுத்து, முருகன், சங்கரேஸ்வரன், தங்கவேலு, குமார், ராஜன்மாரியப்பன், குட்டி, லிங்கம் மற்றும் திரளான திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்