சுகாதார சீர்கேட்டில் வேலூர் மாநகராட்சி 1 வது மண்டலம் கல்லா கட்டும் சுகாதார அலுவலர் பாலமுருகன்..!
வேலூர் மாநகராட்சி 1,வது மண்டலத்தில் சுகாதார அலுவலராக இருப்பவர் பாலமுருகன்இவர் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறி புலம்பி வருகின்றனர் தூய்மைப் பணியாளர்கள். நாம் இதுகுறித்து விசாரித்தபோது கிடைத்த தகவல்.1,வது மண்டலத்தில் சுமார் 300 க்கும் அதிகமான தூய்மைப் பணியாளர்கள், தற்காலிகம் மற்றும் நிரந்தர பணியாளர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்களுக்கு அரசு வழங்கும் கை கழுவும் சோப், வருடத்திற்கு இரண்டு செட் சீருடை மற்றும் அதற்கான தையல் கூலி எதுவும் வழங்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. நிரந்தரப் பணியாளர்கள் உடல்நிலை சரி இல்லாமல் வேலைக்கு வராத அவர்களிடம் மாதம் தோறும் ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு வருகைப் பதிவேட்டில் கையெழுத்து பெற்றுக் கொள்வாராம். பணம் கொடுக்காத ஊழியர்களை அவர்களுக்கு அதிக வேலை கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக சொல்கின்றனர். இவர் இப்படி லஞ்சம் வாங்கி குவித்து பணத்தில் தனதுசொந்த ஊரில் அசையும், சொத்துக்களையும், அசையா சொத்துக்களையும் வாங்கி குவித்துள்ளதாக மாநகராட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன. இனியாவது மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணியாளர்களின் வேண்டுகோளாகும். சுகாதார சீர்கேட்டில் இருக்கும் மாநகராட்சியை களமிறங்கி தூய்மை பணி செய்து வரும் தூய்மைப் பணியாளர்கள் வயிற்றில் அடிக்கும் சுகாதார அலுவலர் பாலமுருகன் மீது லஞ்சஒழிப்புதுறை ஒருகண்வைப்பது நல்லது என்றுவேதனையுடன் சொல்கின்றனர் பாதிக்கப்பட்ட பணியாளர்கள.நிச்சயம் லஞ்சஒழிப்புதுறை தன்கடமையை செய்யும் என்றுஎதிர்பார்ப்போம்.