வாணியம்பாடி அருகே 7 கிலோமேடர் தூரம் உள்ள நெக்கனாமலை கிராமத்திற்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு பொருட்கள் கழுதைகள் மீது அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் நெக்னாமலை என்னும் மலை கிராமம் உள்ளது. இந்த மலை கிராமம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுதந்திரம் அடைந்து 72 வருடங்களை கடந்தும் மலை கிராமத்திற்கு செல்ல சாலை வசதி கிடையாது. கிராமமக்களின் தேவைகளுக்கு மலை அடிவாரம் வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் பகுதி மக்கள் தினமும் நடந்து சென்று வருகின்றனர். இதனால் மலை கிராமத்திற்கு சாலை வசதி கேட்டு அரசுக்கு பல முறை கோரிக்கை மனுக்களை அனுப்பியும், போராட்டங்களை நடத்தியும் இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. தேர்தல் சமையத்தில் வாக்கு பேட்டிகள் அதிகாரிகள் தலைமீது சுமந்து செல்வதும், மலை கிராமமக்கள் உடல்நிலை கோளாறு ஏற்பட்டால் டோலி கட்டி எடுத்து வருவது கடந்த 72 வருடங்களாக நிகழ்வு அரங்கேறி வருகிறது. மேலும் அரசு வழங்கும் பொங்கல் சிறப்பு தொகுப்புகளை மலை அடிவாரத்தில் உள்ள கிரிசமுத்திரம் கூட்டுறவு கடன் சங்கத்தில் மலைவாழ் மக்களை வரவழைத்து வழங்குவது வழக்கம். வேலூர் மாவட்டத்தில் இருந்து புதியதாக திருப்பத்தூர் மாவட்டம் பிரித்த பின்னர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வருவாய்த்துறை அதிகாரிகளுடன் நெக்கனாமலை கிராமத்திற்கு நடந்து சென்று அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதன் அடிப்படையில் அவர் அளித்த உத்தரவின் பேரில் வாணியம்பாடி வட்டாட்சியர் சிவபிரகாசம் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர் குமார், விற்பனையாளர் பிரேமா, வளையாம்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி கவுண்டர் ஆகியோர் மலை கிராமத்தை சேர்ந்த முனிசாமி மற்றும் மலைவாழ் மக்கள் உதவியுடன் தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பரிசுகளை 12 கழுதைகள் மீது ஏற்றி மலை கிராமத்திற்கு கொண்டு சென்றனர். அறிவியல் வளர்ச்சியால் மனிதன் நிலாவுக்கு பயணம் செய்யும் அளவிற்கு வளர்ந்து இருந்தாலும் 7 கிலோமேடர் தூரம் உள்ள மலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் கழுதைகள் மூலம் பொருட்கள் எடுத்து செல்லும் அவலநிலையாக உள்ளது.
• Bharathaidhazh