ஆற்காடு அரசு மருத்துவமனையில் செல்போன் பேசியபடியே நோயாளிக்கு ஊசிபோட்ட நர்சு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. , ஆற்காட்டில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் இந்த மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் பணியில் இருந்த கல்பனா என்ற நர்சு மருத்துவமனைக்கு வந்த நோயாளி ஒருவருக்கு செல்போன் பேசியபடியே ஊசி போட்டுள்ளார். இதனைப் பார்த்த மருத்துவமனையில் இருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். செல்போனில் பேசியபடியே ஊசி மருந்தை எடுக்கும்போது நோயை குணப்படுத்தும் மருந்துக்கு பதிலாக வேறு ஒரு மருந்தை செலுத்திவிடும் அபாயம் உள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட அரசு மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பரிமளா தேவி மற்றும் ஆற்காடு அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர் சிவசங்கரி மற்றும் இரண்டு பேர் கொண்ட மருத்துவ குழுவினர் நர்சு கல்பனாவிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் அறிக்கையின்படி துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டு உயர்அதிகாரிகளுக்கு அனுப்பப்பட உள்ளது என தெரிவித்தனர்.
Popular posts
கள்ளக்குறிச்சி நகராட்சியில் தூய்மை பணியாளர்களை மிரட்டிய சேர்மேன் ஊதியம் வழங்க முடியாது!
• Bharathaidhazh
பனப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் குமாரின் பித்தலாட்டம். லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை பாயுமா?
• Bharathaidhazh
திமிரி சிறப்பு நிலை பேரூராட்சி அதிகாரிகளுக்கே டப் கொடுக்கும் மூன்று ஊழியர்கள்?
• Bharathaidhazh

அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கூடத்தில் கழிவறை சுத்தம் செய்த மாணவர்கள்!
• Bharathaidhazh
தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல.. அதிகாரத் திமிர் பிடித்த பாசிச ஆட்சி.. தவெக தலைவர் ஆவேசம்!
• Bharathaidhazh
Publisher Information
Contact
Bharathaidhaz@gmail.com
9003314592
No,1. Nehru street senguttai dharapadavedu Katpadi taluk
About
We publish Every news Edition with Colourful Pages of main motive we publish advertisement to promote business.Especially we cover Educational News, Devotional News and Medical, Sports Birthdays Annual Functions etc..
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn