திருப்பத்தூரில் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட புதூர்நாடு ஜவ்வாது மலை வனத்துறை மேல்நிலைப்பள்ளியி்ல் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் மரு.ச.பசுபதி MD.,அவர்கள் தலைமையில் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையுடன் (TVS ஜமுனாமரத்தூர் ) இணைந்து நடைபெற்றது. இம்முகாமிற்கு மரு.ரமேஷ் MBBS., முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினர்களாக எண்ணற்ற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்... நிகழ்ச்சியில் அனைத்து மருத்துவ அலுவலர்கள்,Dr.தேவதாஸ்(FD) பச்சியப்பன்(CDO),குமரன்,பெருமாள்,சத்தியராஜ் (VDO'S)உதயகுமார்(WD),அசோக்குமார்(WA) மற்றும் அனைத்து சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் மொத்தம் 845 பேர் பயன்பெற்றனர். 30 பேருக்கு ஈசிஜி எடுக்கப்பட்டது. 49 பேருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. 17பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டது.முகாமில் கலந்து கொண்ட அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் உயர்தர சரிவிகித உணவு பரிமாறப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் கண் முத்து அவர்கள் நன்றி தெரிவித்தார்
• Bharathaidhazh