காஞ்சிபுரம் பட்டா மாற்ற ₹50 ஆயிரம் லஞ்சம் வாங்கி விஏஓ மோசடி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுக உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெய் நகரில் 36 பேர் பிளாட் வாங்கியுள்ளனர். இந்த பிளாட்களில் 10க்கும் மேற்பட்டோருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக கடந்த 7 மாதங்களுக்கு முன் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர். இந்த பட்டா மாற்றம் செய்வதற்கு கிராம உதவியாளர் மூலம் விஏஓ லஞ்சமாக ₹50 ஆயிரம் வரை பணம் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு பணம் பெற்று 7 மாத காலமாகியும் இதுவரை பட்டா பெயர் மாற்றம் செய்யப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெய் நகர் பகுதியில் வாசிகள் நேற்று உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்குள்ள அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலின் பேரில் உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெய்நகர் பகுதி வாசிகளிடம் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஜெய் நகர் பகுதி வாசி திருநாவுக்கரசு கூறுகையில், “எங்கள் பகுதி வாசிகளிடம் பட்டா மாற்றத்திற்கான விஏஓ தலையாரி வசம் ஒருவருக்கு ₹5 ஆயிரம் வீதம் 10 பேரிடம் ₹50 ஆயிரம் வரை பணம் பெற்றுக்கொண்டனர். பணம் கொடுத்தால்தான் வேலை முடியும் என கூறியதால் பணம் கொடுத்தோம். பணம் கொடுத்தும் வேலையை முடிக்காமல் எங்களை அலைக்கழித்து வருகின்றனர். இதனால் எங்களுக்கு கால விரயம் ஆவதுடன் பணவிரயமும் ஏற்பட்டு மண உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு லஞ்சம் வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பட்டாவினை உடனடியாக பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஜெய்நகர் பகு
• Bharathaidhazh