பவானி அந்தியூர் பிரிவில் உள்ள பாவடி திடலில் 30 ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாவு நூல் தயாரிக்கும் பணி செய்து வருகின்றனர் இந்நிலையில் இன்று மதியம் நெடுஞ்சாலை துறையினர் உதவி கோட்ட பொறியாளர் தலைமையில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமாக முன்வரிசையில் அமைந்துள்ள போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த  சுமார் 50 கல்லுகளை   நெடுஞ்சாலை துறையினர்   ஜேசிபி மூலம் நெடுஞ்சாலைத் துறையை சேர்ந்த ஊழியர்களை கொண்டு அகற்றினர் இவ்வாறு  அகற்றம் செய்யப்பட்ட கல்லுகளை  டிராக்டர் வண்டியில் ஏற்றினர் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பவானி மாவட்ட கண்காணிப்பாளர் சேகர் உத்தரவின்பேரில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர்  இதனால் அந்தியூர் பிரிவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாவண்ணம் பேருந்துகள்   பவானி ஊராட்சி ஒன்றியம் வழியாக அனுப்பப்பட்டது இச்சம்பவத்தால் அந்தியூர் பிரிவு பரபரப்புடன் காணப்பட்டது.