ஒருங்கிணைந்த தருமபுரி கிருட்டினகிரி மாவட்டத்தின் சாதனை நாயகியும், நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் முதன்மை செய்தியாளரும், டிஜிட்டல் எடிட்டருமான, என் அன்பு மகள் திருமதி ஹேமலதா ராக்கேஷ் அவர்களின் அருமைச் செல்லக்குட்டியும், எங்களது பேத்தியுமான ஆத்மிகா தன்னுடைய ஒன்னே முக்கால் வயதிலேயே (இப்போ இரண்டு வயது) இந்தியன் புக் ஆப் ரெகார்ட்ஸ் ல முத்திரை பதித்திருக்கிறாள். 29 மாநில தலைநகரங்கள், தமிழ் பாடல்கள் சொல்லும் குழந்தையாய் அறிவாற்றலில் அசத்துறா பேத்தி ஆத்மிகா.. இன்றைய தலைமுறை குழந்தைகளின் அறிவு மற்றும் வளர்ச்சி கடந்த தலைமுறை குழந்தைகளை விட எங்க பேத்தி ஆத்மிகாவுக்கு 2 மடங்கு அதிகமாகவே உள்ளது. (இதனை நிரூபிக்கும் வகையில் பல இடங்களில் பல்வேறு குழந்தைகள் தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றனர்.) சென்னையில் வசிக்கும் என் அன்பு மகள் திருமதி.ஹேமலதா ராக்கேஷ் தம்பதியினர். அவர்களுடைய குழந்தை ஆத்மிகாவுக்கு இப்போ இரண்டு வயது ஆகிறது. ஆனால் ஒன்றே முக்கால் வயதிலேயே அவளின் அறிவாற்றல் காண்போரை வியக்க வைத்தது. வீட்டில் உள்ளவர்களிடம் தன் கொஞ்சு தமிழில் அழகாக தமிழ் பாடல்களை பாடி அசத்துகிறார். இதுமட்டுமல்ல ஆங்கில எழுத்துக்கள், உடல் பாகங்கள், 2 திருக்குறள், ஆத்திச்சூடி என மனப்பாடமாக சொல்கிறாள். அதோடு ஒன்று, இரண்டு முதல் 20 வரை எண்கள், பழங்கள் காய்கறிகள் பெயர்கள், 5 மாநில முதல்வர் பெயர்கள், கம்யூனிட்டி வொர்க்கர்ஸ் என்று சொல்லக்கூடிய 25 வகைக்கும் மேற்பட்ட பெயர்கள், இந்தியாவின் 29 மாநிலங்களின் பெயர்கள் என மனப்பாடமாக விளையாட்டு வாக்கில் சொல்கிறாள் என் பேத்தி ஆத்மிகா. அவள் சொல்வதை கேட்கும் போது சிறு குழந்தைக்கு இத்தனை அறிவா என வியக்க வைக்கிறாள். இது குறித்து என் மகள் ஹேமலதா ராக்கேஷ் அவர்கள் கூறும் போது, பாப்பா ஆத்மிகா 7 மாதம் முதலே வண்ணங்கள் மற்றும் பொம்மைகளை புத்தகங்களில் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தாள். நாங்களும் அவளுக்கு பல்வேறு சிறுவர் புத்தங்கள் மற்றும் கதைகளை அறிமுகப்படுத்தினோம். பாப்பாவும் ஆர்வமுடன் கற்றுக் கொண்டாள். இதற்காக எப்போதும் அவளை நாங்கள் வற்பறுத்துவதில்லை என்றும் அவளே ஆர்வமுடன் படிப்பாள் என்று கூறினார். அதே போல என் பேத்தி ஆத்மிகாவின் ஞாபகத்திறன் மேலும் வியக்க வைக்கிறது. உலகில் உள்ள செல்வங்களில் சிறந்த செல்வம் மழலைச் செல்வம் தான். குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் பிடித்தமானவர்கள் தான். அதுவும் மழலை மொழியில் குழந்தைகள் பேசும் போது மனதில் உள்ள பாரங்கள் லேசாகி புது உற்சாகம் பிறப்பதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி ஒரு குழந்தை தான் ஆத்மிகா. பேத்தி குழந்தை ஆத்மிகா, அழகு தமிழில் நிலா நிலா ஓடிவா பாடல், குத்தடி குத்தடி கண்ணமா, தோசை அம்மா தோசை என்று மழலை மொழியில் பாடல்களை பாடி அசத்தி வருகிறார். அதே போல உடல் பாகங்கள் பெயர் சொன்னால் அவற்றை சரியாக பொருத்தி சொல்கிறார். நாட்கள், கிழமைகள், தமிழ் வருடங்கள், ஆங்கில வருடங்கள் என அடுக்கடுக்காக பெயர்களை சொல்லி அசத்தி வருகிறார் ஆத்மிகா. அம்மா இங்கே வா, ஆசை முத்தம் தா, இலையில் சோறு போட்டு என்று ஆத்திச்சூடியும் பாடுகிறார் எனது மகள் திருமதி ஹேமலதா ராக்கேஷ் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தாலே ஒரு மினி ப்ளே ஸ்கூலில் நுழைவது போல் உள்ளது. ஹால் .முழுவதும் படங்கள் தொங்கி கிடக்கிறது. பறவைகள், பழங்கள், விலங்குகள், வாகன்ங்கள் என வரிசையாய் மாட்டிவைத்துள்ள படங்களில் உள்ள பெயர்களை சொன்னால் ஆத்மிகா அவற்றை சரியாக கை காட்டுகிறார். அதோடு மற்றொரு ஆச்சர்யம், நம் இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்கள், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா மாநில முதல் அமைச்சர்களின் பெயர்கள் என வரிசையாக சொல்கிறார். மேலும் மருத்துவர், பொறியாளர், டிரைவர் என 25 க்கும் மேற்பட்ட பெயர்களை படம் பார்த்து சொல்வதோடு 2 திருக்குறள்களையும் சொல்கிறார். மேலும் ஏபிசிடி பெயரின் வார்த்தைகள், எண்கள் ஒன்று முதல் 20 வரை என அவளின் மழலை மொழி இனிதாக இருக்கிறது. காலை 1 மணி நேரம் மற்றும் மாலை 1 மணி நேரம் புத்தகங்களை கையில் எடுத்து அழகாக படிக்கும் ஆத்மிகாவிற்கு தினமும் அவரின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி அழகாக வார்த்தைகளை விளையாட்டு வாக்கில் சொல்லி கொடுக்க அதை அப்படியே மனதில் பதிய வைத்து திரும்ப சொல்கிறார். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். அதை மெய்ப்பிக்கும் விதமாக திருமதி ஹேமலதா ராக்கேஷ் குடும்பம். 1 மாதத்திற்கு முன்பு சென்ற சுற்றுலா தளம் குறித்து கேட்டாலும், அங்கு பார்த்த பொருட்களை ஞாபகம் வைத்து சில பொருட்களின் பெயரை கூறுகிறார். அதே போல் அம்மா, அப்பா பணியிடங்கள் பெயர்கள், தாத்தா பாட்டி தன்னை எப்படி அழைப்பார்கள் என்றும் தெளிவாக கூறுகிறார். இத்தனை விசயங்களை இந்திய புக் ஆப் ரெகாட்ஸ் அலுவலர்கள் பேத்தி ஆத்மிகாவை நேரில் கண்டு, பேசி, உண்மையை உணர்ந்து, பேத்தி ஆத்மிகா பெயரை இந்தியன் புக் ஆப் அவார்டுக்கு பரிந்துரை செய்தார்கள். முறைப்படி அந்த அவார்டுக்கு தேர்வு செய்யப்பட்ட செய்தி, கடந்த வாரம் உறுதி செய்யபட்டது. சரியாக 26.12.2019 இரவு 9.00 மணி அளவில் இந்தியன் புக் ஆப் ரெகார்ட்ஸ் மூலம் பெறபட்ட சாட்சிகள், சான்றுகள், அவார்டு அத்தனையும் வந்து சேர்ந்தது. அவை உங்கள் மேலான பார்வைக்கு. ஆனா, என்னான்ன.....இப்போதே எல்.கே.ஜி வகுப்பில் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை ஆத்மிகா படிச்சு முடித்துவிட்டாளே, பள்ளியில் சேர்த்தால் என்ன செய்வாள் என்று ஆத்மிகாவின் குட்டி தோழிகள் இப்போதே கிண்டல் செய்கிறார்கள். என் அன்பு பேத்தி ஆத்மிகா தன் தலைமுறை சிறக்க பேரோடும் புகழோடும் வாழ வாழ்த்துங்கள். அளவில்லா மகிழ்ச்சி. எனக்கு மட்டுமல்ல. என் இனிய அன்பான தலைமுறைக்கும், எனை அறிந்த அத்துனை நல் உள்ளங்களுக்கும் தான்.