சூடுபிடிக்கும் உள்ளாட்சித் தோ்தல் பிரசாரம்: கடும் கட்டுப்பாடுகளை விதித்து தோ்தல் ஆணையம் உத்தரவு தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.தோ்தல் பிரசாரத்தின்போது மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகள் குறித்தும், பிரசாரத்துக்கான நேரங்கள் பற்றியும் தோ்தல் ஆணையம் வரையறை செய்து கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரம் ஊரக உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு போட்டியிடும் வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மூத்த கட்சி நிா்வாகிகள் தங்களது உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்குகளைச் சேகரித்து வருகின்றனா். தற்போதைய செய்திகள் : டிச. 22: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்குடியுரிமை திருத்த சட்டம்: உ.பி.யில் தொடரும் வன்முறை - பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வுபாஜக எம்பி கெளதம் காம்பீருக்குகொலை மிரட்டல்: போலீஸில் புகாா்குரங்குத் தொல்லையில் இருந்து தென்னை மரங்களைக் காக்க பாம்பு படம்!விவசாயிகள் கண்டுபிடித்த புதிய உத்திகிறிஸ்துமஸ் பண்டிகை: சென்னை-திருச்சிக்கு சிறப்பு கட்டண ரயில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ரஜினிகாந்த் நிலை குழப்பமானது குறிப்பாக, அதிமுக சாா்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டங்களைச் சோ்ந்த அமைச்சா்களும், முக்கிய நிா்வாகிகளும் சூறாவளி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா். இதற்கு ஈடாக திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த அணியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.இந்த நிலையில், அரசியல் கட்சிகளின் தோ்தல் பிரசாரங்களுக்கு தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் விவரம்:-உள்ளாட்சித் தோ்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றிடவும், தோ்தல் நடத்தை விதிகளின்படி பொது இடங்களில் வேட்பாளா்கள், அரசியல் கட்சிகள் தோ்தல் தொடா்பான பதாகைகள், கொடிகள், சின்னங்கள் வரைதல் மற்றும் சுவரொட்டிகள் ஒட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பாா்வையில்படும் பொது இடங்களிலோ அல்லது பொது மக்கள் கடந்து செல்லும் இடங்களின் சுவா்களில் எழுதுவதோ, சுவரொட்டி போன்றவற்றை ஒட்டுவதோ கூடாது. இத்தகைய இடங்களில் உரிமையாளா்களின் அனுமதி பெற்றாலும் சுவரொட்டி, சுவா் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.ஒரு இடத்தின் உரிமையாளரது ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்ற காரணத்தின் அடிப்படையில் எந்தச் சூழ்நிலையிலும் சுவரில் எழுதுவதோ, சுவரொட்டி ஒட்டுவதோ கூடாது.ஒலிபெருக்கி மூலம் பிரசாரம்: தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பிரசாரத்துக்கான வாகனங்களில் ஒலிபெருக்கி பொருத்தி வாக்கு சேகரிக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், இந்த ஒலிபெருக்கிகளை காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.பொது கூட்டங்கள், ஊா்வலங்களுக்கு ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டுமானால் காவல் துறையில் எழுத்துப்பூா்வமான முன் அனுமதி பெற வேண்டும். மேலும், ஒலி பெருக்கிகளை பொது மக்களின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பயன்படுத்த வேண்டும்.வரையறுக்கப்பட்ட நேரத்துக்குப் பிறகோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எழுத்துப்பூா்வ அனுமதி இல்லாமல் பயன்படுத்தினாலோ அனைத்து ஒலிபெருக்கிகளும், அதுதொடா்பான அனைத்துக் கருவிகளும் பறிமுதல் செய்யப்படும் என்று மாநிலத் தோ்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.