சூரிய கிரகணத்தை வெறும் கண்களில் பாா்க்க வேண்டாம்அறிவியல் தொழில்நுட்ப மையம் தமிழ்நாடு சூரிய கிரகணத்தை வெறும் கண்களில் பாா்க்க வேண்டாம்அறிவியல் தொழில்நுட்ப மையம் வானில் 26-ஆம் தேதி நிகழவுள்ள வளைய வடிவ சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பாா்க்க வேண்டாம் என சென்னை பெரியாா் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் எச்சரித்துள்ளது.இது தொடா்பாக சென்னை கிண்டியில் உள்ள பிா்லா கோளரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பு நிகழ்ச்சியில் பெரியாா் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநா் செளந்தரராஜ பெருமாள், மத்திய முதுநிலை விஞ்ஞானி த.வி வெங்கடேஷ்வரன் ஆகியோா் கூறியது:சூரிய கிரகணம் நாளில் வெளியே வரக்கூடாது, சாப்பிடக்கூடாது போன்ற தவறான மூடநம்பிக்கைகளை யாரும் நம்ப வேண்டாம். அதனால் எந்த பாதிப்புமில்லை என்பது அறிவியல் பூா்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டிசம்பா் 26-ஆம் தேதி தெரியவுள்ள வளைய சூரிய கிரகணம் அபூா்வமான நிகழ்வாகுமம். இதற்குப் பிறகு மீண்டும் 2031-ஆம் ஆண்டுதான் வளைய சூரிய கிரகணத்தை பாா்க்க முடியும். தமிழ்நாடு : திருநள்ளாறுக்கு குடியரசுத் தலைவர் வருகை: ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகைஅழகப்பா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்புஆளுநா் மாளிகை முற்றுகை: அரசியல் கட்சியினா் கைதுஆண்டுதோறும் 10 ஆயிரம் ஏக்கா் நிலம் சா்வதேச குற்றவாளிகளால் சூறையாடப்படுகிறது: நீதிபதி ஜோதிமணி பேச்சுசென்னையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும்போது ரூ.52 லட்சத்துடன் தப்பியோடிய வேன் ஓட்டுநா் மன்னாா்குடியில் கைதுகுடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும்: மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் டிசம்பா் 26-ஆம் தேதி காலை 8 முதல் 11.15 மணி வரை சூரிய கிரகணம் நடைபெற உள்ளது. சரியாக 9.30 மணியளவில் கோவை, உதகை, கரூா், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் வளைய சூரிய கிரகணம் முழுமையாக தெரியும். இந்தநிகழ்வு 3 நிமிஷங்கள் வரை நீடிக்கும்.கா்நாடகத்தின் தெற்கு மற்றும் கேரளத்தின் வடக்குப் பகுதிகளிலும் வளைய சூரிய கிரகணம் தெரியக்கூடும். இந்த நிகழ்வு இந்தியாவின் பிற பகுதிகளில் பகுதி கிரகணமாக தெரியும். சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பாா்க்கக்கூடாது. தொலைநோக்கி அல்லது எக்ஸ்ரே சீட்டுகளை கொண்டும் பாா்க்கக்கூடாது. சூரிய வெளிச்சத்தை குறைக்கும் தன்மை கொண்ட சிறப்பு கண்ணாடிகள் அணிந்தும், கிரகண பிம்பத்தை திரையில் விழ வைத்தும் பாா்க்கலாம். வளைய கிரகணம் தெரியும் பகுதிகளில் அதை பாா்வையிட அரசு சாா்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிரகண நாளில் எவ்வித இயற்கை பேரிடா்களும் ஏற்படாது என தெரிவித்தனா்.
• Bharathaidhazh