திருப்பத்தூர் மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியோடு அதன் முதல், மாவட்ட_ஆட்சியர் திரு.சிவன்அருள் அவர்கள் பொறுப்பேற்று இருப்பது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே திருப்பத்தூர் மக்கள் பாதை சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஐயா திரு.சண்முகம் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்தோம், நாங்கள் கோரிக்கையாக வைக்க நினைத்த சுற்றுச்சூழல் மேம்பாடு, இயற்கை பாதுகாப்பு, நீர்நிலைகள் மீட்டெடுப்பு, கல்வி வளர்ச்சி போன்ற பணிகளுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவதும் அதற்கு உறுதுணையாக இருங்கள் என்று கேட்டுக் கொண்ட தருணம் மிக நெகிழ்ச்சியடைய செய்தது, அவருடைய சிறப்பான செயல்பாடுகளுக்காக திருப்பத்தூர் மக்கள் பாதை சார்பாக வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம், மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மேம்பாடு, இயற்கை பாதுகாப்பு, நீர்நிலை மீட்டெடுப்பு, கல்வி வளர்ச்சி என சமூக மாற்றத்திற்கான பயணத்தில் திருப்பத்தூர் மக்கள்பாதை தொடர்ந்து பயணிக்கும், திருப்பத்தூர்_மக்கள்_பாதை